Saturday, May 10, 2014

எனக்கு நேற்று நடந்த நிகழ்வு வியப்பைத் தந்தது!.

நான் இருக்கும் இடத்தில் ஒரு நபர் பழக்கம்.
அவர் தையல் கடை தொழில் செய்து வருகிறார். .
அவர் ஒரு வருட காலமாக எனது கடைக்கு அடிக்கடி வரும் நபர்.
அவர் நேற்று என் கடைக்கு வந்தார் .

'வாங்க அண்ணே' என்று அவரை நான் வரவேற்றேன்.
அவர் உடனே 'என்ன அண்ணே தொழுக போகலாமா' என்று கேட்டார்
'ஆமா போகணும் தான்' என்றேன்.
'சரி வாங்க அண்ணே போவோம்.சிறுது நேரம் இதோ வந்து வருகிறேன்' என்று சொன்னேன்.

அதுக்கு அவர் சொன்னார்
'இன்று நடந்து தான் போகணும் நான் பைக் இரவல் வாங்கும் நபர் காணோம் அதனால் நாம் நடந்து தான் போகணும் என்று சொன்னார்'

'சரி! அதனால் என்ன இருக்கு. வாங்க நடந்து போகலாம்.' என்று சொன்னேன்
'சரி' என்று சொல்லி விட்டு அவர் எனது கடைக்கு முன் நின்றுகொன்று இருந்தார்.
நான் கடையை அடைத்து விட்டு வெளியே வந்து பார்த்தால் அவரைக் காணவில்லை
என்னடா! இப்பத்தான் நின்றார் அதுக்குள்ளே அவரைக் காணவில்லை. என்று மனம் அதிசயத்தது
நான் அங்கும் இங்கும் அவரைத் தேடிப் பார்த்தேன். ஆனால் அவரைக் காணவில்லை.
பிறகு நான் நடந்துதே தொழச் சென்றேன்.
நான் நடந்து போய்க்கொண்டு இருக்கும் போது அவரை வழியில் பார்த்து விட்டேன்.
அவர் பக்கத்தில் உள்ள கடைக்காரர் கார் வைத்து இருக்கிறார். அந்த காரில் அவரும் போய்க்கொண்டு இருந்தார்.
சரி! என்று நான் கண்டு கொள்ளவில்லை.
பிறகு நான் தொழுதுவிட்டு சாப்பாட்டுக்கு சாப்பாட்டு கடைக்கு வந்தேன்
அவரும் அங்கே எனக்கு முன்னாள் வந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.
அந்த கடையில் அவர் என்னை எதிர் பாராமல் என்னைப் பார்க்க நேரிட்டது.
அவர் செய்த தவறு அவர் மனதை யோசிக்க வைதிருக்குமென நினைக்கின்றேன்.
ஏதோ தவறு பண்ணியது போல் அவர் முகம் மாறி வாடிப்போனது.
அவர் என்னிடம் பேச்சை தொடக்கி ,,அவராகவே சொன்னார்.

'நான் .உங்கள் கடையின் வெளியில் நிற்கின்றதைப் பார்த்து 'வாங்க தொழுகைக்கா! என்று காரில் வந்த எனது நண்பர் கேட்டார் நானும் 'ஆமாம்' என்று சொன்னேன்.
'சரி! வாங்க நம்ம காரில் போகலாம்'
என்று கூப்பிட்டார் அதனால் நான் அவர் காரில் தொழுக சென்று விட்டேன்' என்று சொன்னார்.
இதை நான் அவரிடம் கேக்கவே இல்லை. அதனை அவராகவே சொன்னார்.
இந்த நிகழ்வு என் மனதில் வந்து மறைகின்றது.

மனிதன் எவ்வளவு சுயநலவாதியாக இருக்கிறான்.. அவர் காரில் அவர் நண்பரின் அழைப்பை ஏற்று அவருடன் தொழப் போக அவர் விரும்பினால் அவர் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம் நான் ஒன்றும் அதற்கு தடை செய்யப் போவதில்லை. நான் மன நிறைவோடு அவரை அவரோடு அவரது காரில் செல்லும் படி சொல்லி இருப்பேன் ..

எப்படி எல்லாம் மனிதன் இறைவனை தொழப் போகும் நிலையிலும் சுயநலமாக இருக்கின்றான் என்பதனை நினைதது மனம் வருந்தச் செய்கின்றது ...
தனக்கு கிடைக்கும் சுவனம் தன் சகோதரனுக்கும் கிடைக்க வேண்டுமென நினைப்பதே இஸ்லாத்தின் மாண்பு . அதுவே நாயகம் விரும்பியது
அனைவருக்கும் நல்வழி காட்ட இறைவனிடம் இறைஞ்சுகின்றேன் ...
மனித நேயம் வளரட்டும்


தங்கள் அன்புள்ள Jabbar Arasar Kulam

No comments: