Monday, May 12, 2014

விலை குறைவு என்று சொன்னால். அவர்கள் நம்புவதில்லை

எங்கள் கடையில் தயாரித்த பொருளை
புகழ் பெற்ற பெரிய நிறுவனம் வாங்கி
அவர்கள் தயாரித்த பொருளாக விற்பார்கள்

அங்கு விலையோ அதிகம்
அங்கு பொருள் வாங்க வருபவர்களிடம்
இதே பொருள் அங்கு சென்று வாங்குங்கள்
விலை குறைவு என்று சொன்னால்.
அவர்கள் நம்புவதில்லை

அங்கு தரமிருக்காது
இங்குதான் தரமான பொருள் உண்டு
இங்கு வாங்கிய பொருளைத்தான்
பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்
எனது மனைவியும் இங்கு வாங்கிய
பொருளைத்தான் விரும்புவாள்
விலையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை
நான் விரும்பியதை கொடுங்கள்
என்று வாங்கிச் செல்வார்கள்
(சென்னையில் நடந்த உண்மை நிகழ்வு )

ஸ்டேடஸ் நிலையும் இக்கதிதான்
காப்பியடித்து போடப்பட்ட ஸ்டேடஸ்
பல லைக் வாங்குகின்றது

பணத்தை தேடிக்கொள்
பணம் பணத்தை சேர்க்கும்

புகழைத் தேடிக் கொள்
குப்பையை கொட்டினாலும்
வாரிச் செல்வார்கள்

#ஸ்டேடஸ்
 

No comments: