Saturday, May 10, 2014

கேட்டது கிடைக்கவில்லை எனினும் தேவைப்பட்டது கிடைத்தது.

நான் கேட்டது கிடைக்கவில்லை ...
நான் கேட்காதது கிடைத்தது .

நான் கேட்டது குறைவு
நான் கேட்டதை விட கிடைத்தது அதிகம்

அதிகமாக கிடைத்ததை அடுத்தவர் கேட்டார்
அதிகமாக கிடைத்தது எனக்கு
அதனை அடுத்தவருக்கு கொடுக்க மனமில்லை

அதிகமாக கிடைத்ததின் நிறைவு நீடிக்கவில்லை
அதிகமானதை அதிகமாக்க வழி தேடினேன்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி சொல்லிச் சென்றனர்
ஒவ்வொன்றிலும் ஓயாது நிறை சேர்க்க முயன்றேன்

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிக்கல் சேர்ந்தது
ஒவ்வொரு சிக்கலையும் சமாளிக்க வழி தேடினேன்

கிடைத்தது ஒவ்வொன்றாய் கரைந்து போனது
கிடைத்ததை கேட்டவருக்கு கொடுக்காமல் மறைத்து வைத்தது
கிடைத்தது கேட்க்காமல் போகுமிடம் தெரியாமல் போய்ச் சேர்ந்தது

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான் கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
- குர்ஆன் 57:23

No comments: