Monday, June 30, 2014

யார் அதைச் செய்தது!

யார் அதைச் செய்தது!
யார் அதைச் செய்தது என்பதை
யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை
யார் எப்படிப் போனால் நமக்கென்ன
யாவரும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கடந்து போனார்கள்

'நரி வலம் போனால் என்ன.,
இடம் போனால் என்ன,
மேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி. '

எவரோ
எதையோ தவறாக
எழுதி விட்டார்
எழுதியதர்க்கு ஒரு மறுப்பு
எழுதியதை அழித்தாவது செல்வோம்
என்ற மனமும் வரவில்லை

நல்லதை செய்தால்
நல்லதை செய்தவனுக்கு
பொல்லாங்கு வந்து சேரும்
நல்லவனுக்கு பாதுகாப்பில்லை
பரவலாக இச்சிந்தனை
பலர் மனதில் வந்து விட்டது
நல்லவருக்கும் பாதுகாப்பில்லாமையால்
---------------------------------------------------------------------------------
 நினைத்தேன்
செய்ய நினைத்தேன் - ஓரம்போ

நினைத்தேன்
செய்ய முயன்றேன் - அருகில் வா

நினைத்தேன்
செய்து முடித்தேன் - முடித்ததைச் சொல்

நினைத்தேன்
செய்து முடித்தேன்
சொல்ல மாட்டேன் - தூரம் போ

நினைத்தேன்
நல்லதை செய்து முடித்தேன்
நன்றி நவின்றார்கள் - தொடர்ந்து வருகின்றேன்

No comments: