Sunday, July 27, 2014

#9 திருக்குறளும் திருக்குர்ஆனும்

குறள் - 01:09.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
.
விளக்கம் :
குறையுள்ள உறுப்புகளில் அதன் குணம் இருப்பதில்லை அதுபோலத்தான் எண்குணத்தை உடைய இறைவனை வணங்காத தலையும்.
.
குர்ஆன் - 2:171 & 22:77.
- (அறியாமையில் தங்களுடைய மூதாதைகளைப் பின்பற்றும்) அந்தக் இறை மறுப்பாளர்களின் உதாரணம். (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக் கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மேலும், அவர்கள் புலன்கள் இருந்தும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதனையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
- நம்பிக்கையாளர்களே! நீங்கள் குனிந்து சிரம் பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள்.
.
விளக்கம் :
இறைவனை வணங்காது இருப்பவர்கள் உறுப்புகள் இருந்தும் அதன் குணம் அற்றவர்கள்போல், இறைவனை சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள் நம்பிக்கையாளர்கள் மேலும் வெற்றியாளர்கள்.
..

குறிப்பு :
1) கோளில் என்றால் மதிப்பற்ற அல்லது குறையுள்ள.
2) எண்குணத்தோன் என்பதற்கு சமணர் ஒருவகையிலும் பாரதி ஒருவகையிலும் பொருள் தந்து உள்ளனர் மேலும் பலரும் பல வகை பொருள் தருகின்றனர்.. "எண்குணத்தோன்" என்ற சொல்லுக்கு விளக்கம் தருபவர்களை விட வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்று அறிவதே சரியான பொருள்அறிய பொருத்தமாக இருக்கும். இதற்கு முன்உள்ள 8 குறல்களில் ஒவ்வொன்றிலு ஒவ்வொரு பண்புப்பெயர்களை குறிப்பிட்டே வந்துள்ளார். இஸ்லாத்தில் யார்ரும் கண்டிராத இறைவனை உருவமாக இஸ்லாமியர்கள் வழிபடாமல் மாறாக அவனின் பண்பு பெயர்களை கொண்டு அவனை புகழ்ந்து வாங்குகிறவர்களாக இருக்கின்றனர், இவை இரண்டிர்குமான வேற்றுமை என்பது மொழி மட்டுமே.

1. ஆதி பகவன் (First cause) (அல்-அவல் : ஆதியானவன்).
2. வாலறிவன் (Know-er of everything) (அல்-ஹக்கீம் : ஞானமுடையவன்).
3. மலர்(அகம்)மிசை ஏகினான் (know-er of hidden) (அல்-பட்டின் : அந்தரங்கமானவன்).
4. வேண்டுதல் வேண்டாமை இலான் (One who is unbiased) (அஸ்-சமது : தேவையற்றவன்).
5. இறைவன் (Almighty) (அல்லாஹ்).
6. பொறிவாயில் ஐந்தவித்தான் (Controller of the five senses) (அல்-ஹாதி : மனதை நேர்வழி செலுத்துபவன்).
7. தனக்குவமை இல்லாதான் (One who has no parallel) (அல்-அஹது : நிகரில்லா ஒருவன்).
8. அறவாழி அந்தணன் (Sea of Virtue) (அல்-முக்கிசித் : நீதமாக அறத்தோடு நடப்பவன்).
Reference :
1) http://www.thirukkural.com/2009/01/1.html#9
2) http://www.tamililquran.com/qurandisp.php?q=செவிட&start=2#2:171
3) http://www.tamililquran.com/qurandisp.php?start=22
4) http://banukumar_r.blogspot.in/2012/07/blog-post_29.html
5) http://dthirukkural.blogspot.in/2013/06/kolil-poriyin-gunamilave-9.html
6) http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0009.aspx

 

 Rafeequl Islam T
  What does ISLAM really teach?
#1 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #6 திருக்குறளும் திருக்குர்ஆனும்
#7 திருக்குறளும் திருக்குர்ஆனும்
 #8 திருக்குறளும் திருக்குர்ஆனும்

No comments: