Saturday, July 26, 2014

இலவச ஆன்லைன் இணைய தளங்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.

இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விசயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஆன்லைன் மூலம்
பல தரப்பட்ட விசயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விசயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
ஒரு சில விசயங்களை நீங்கள்
ஆன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

01 - நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

02 - போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் Digital Photography Tutorials
போன்றவைகளை பயன்படுத்தலாம்.

03 - நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

04 - எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

05 - சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

06 - ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

07 - உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.instructables.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

08 - நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

09- ஹீரோடாக்கீஸ் எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த இணையதளம் தமிழ் மக்களுக்கான பொழுதுப்போக்கில் ஒரு புதிய பரிமாணத்தை தர உள்ளது. உலகில் எங்கு இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந் இணையதளத்தில் உள்ள படங்களை உயர் தரத்தில் கண்டு மகிழலாம்
இணையதள முகவரி: www.herotalkies.com

 ஆன்லையனில் அதிக டிவி சேனல்கள்
ஆன்லையனில் அதிக டிவி சேனல்கள்
இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணையதளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன்லைன் மூலம் பார்க்க கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட்டணமும் இல்லாமல்
இலவசமாக ஆன்லைன் மூலம் உலக நாடுகளில் இருக்கும் 823 டிவி சேனல்களையும் பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உலகத்தில் அனைத்து நாடுகளிலும் பல மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரே தளத்தில் இருந்து கண்டு ரசிக்கலாம்.


இணையதள முகவரி: http://www.tvweb360.com/


Source  இறை மார்க்கம்

 தமிழில் கணினி, இணையம், ப்ளாக்கர் தொடர்பான தகவல்கள்.
 ப்ளாக்கர் நண்பன்
 எளிய தமிழில் தொழில்நுட்ப தகவல்கள், computer tips.
வடகரை தாரிக்

No comments: