Wednesday, July 2, 2014

தேவை தேட வைக்கின்றது

இனிப்பு இன்னும் கிடைக்க வில்லை
இனிப்பை நெடு காலங்கள் வைத்திருந்தால் கெட்டு விடும்

நினைத்தது ஒன்று
நடந்தது ஒன்று
நம்பினார் கெடுவதில்லை
நம்பிக்கை உறுதி பெற வேண்டும்
நல்லதாகவும் கிடைக்க வேண்டும்

ஆசைப் பட வேண்டும்
ஆசைப் பட்டது நிறை வேற வேண்டும்

நடக்க முடியாததில் ஆசைப் பட்டு
உள்ளதையும் இழந்து வேதனைப் பட்டு பயனில்லை

காலத்தே செய்ய வேண்டியதை செய்வதை விட்டு
காலத்தின் மீது பழி சுமத்துவது ஏன் !

விதியின் விளையாட்டா
விளையாட்டால் வந்த வினையா!
-------------------
தேவை தேட வைக்கின்றது
தேவை மனிதனை உருவாக்குகிறது
தேட வேண்டிய காலத்தில் தேடி விட வேண்டும்
அறிவு சக்தி பெற்றது
அறிவை தேடி சேர்த்துக் கொள்வது உயர்வானது
அறிவு அவசியமான நேரத்தில் கை கொடுக்கும்
அறிவை விரும்பி இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்
அறிவுக்காக பிரார்த்திப்பதோடு அதற்க்கு முயற்சிக்கவும் வேண்டும்

رَبِّ زِدْنِيْ عِلْمًا Rabbi zidni ilma
என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!
-அல்குர்ஆன் - 20 :114

No comments: