Thursday, July 31, 2014

காசா மக்களே! நாங்கள் உங்கள் அருகில் நிற்கவில்லை நாங்கள் நீங்களாகவே நிற்கின்றோம்

முதன் முதலாக

மகன் அம்மாவை இழந்து
அப்பா மகளை இழந்த நிலையில்
அம்மா தன் பிள்ளைகளை இழந்த நிலையில்
தியாகத் திருநாளில் தொழ எழுப்ப முடியவில்லை
பிள்ளைகள் காசா போரில் தியாகமானதால்
கொடிய இஸ்ரேலிய அரக்கனால் அழிக்கப்பட்ட
உறவுகளை தேடி அலையும் கண்கள்
பச்சிளம் சிறார்கள் ஏவுகனையால் சிதறப் பட்டார்கள்

மகிழ்வுகள் மறைந்து
சோகங்கள் சூழ தியாகத் திருநாள்
விழிகள் அருவியாய் கண்ணீரைக் கொட்டுகின்றன
நாம் கனத்த இதயத்துடன்
தியாகத் திருநாள் பெருநாளை
காசா மக்களின் வேதனைகளை நினைத்து
மனதில் பாராத்துடம் தியாகத் திருநாளை தியாகம் செய்தோம்

உண்மை அழிவதில்லை
உண்மை உயர்வடைத்து வரும்
காலம் பலமான உம்மத்துகளை சேர்பிக்கும்
பல நேரங்களில் பாதிக்கப்பட்ட உம்மத்துகள்
உறுதியோடு வீரத்தோடு வருவார்கள்
விதைக்கப் பட்ட விதை
செடியாகி கொடிகளின் வழியே பன்மடங்கு
வலுவான விதைகளைத் தரும்
விதைகள் பதியப் பட்டு விட்டன

உங்களுக்காக உலக உம்மத்துகள்
ஏக இறைவனிடம் கண்ணீர் மல்க இறைஞ்சினார்கள்
காசா மக்களே!
நாங்கள் உங்கள் அருகில் நிற்கவில்லை
நாங்கள் நீங்களாகவே நிற்கின்றோம்
==============

picture Source  د.أشرف القدرة
 #عاجل_وزارةالصحة_غزة
بعض من عائلة فلسطينية تقيم صلاة الجنازة على طفلها في ساحة مجمع الشفاء الطبي بعد استهداف المساجد
#عاجل_وزارةالصحة_غزة some of the Palestinian family living funeral prayer for her child in the theatre complex of medical healing after the targeting of mosques (Translated by Bing)

No comments: