Friday, July 4, 2014

எதை எடுத்தான்.....?


இல்லை... இல்லை. ...இல்லை
இருப்போனும் ஏதோ
ஒன்றுக்காய் போடும் கூப்பாடு
இல்லாதானும் இடைக்கிடை
வாசிக்கும் வாய்ப்பாடு

பிறக்கும்போது வெறும் கை
ஏந்தித்தான் வந்தான் பின்
கிடைத்த பிச்சைகளெல்லாம்
தனக்கே தனக்கெனக்கொண்டான்

பிழைக்க வந்த ஊரென்றெண்ணியே
வெரும் களிப்பிலேயே வாழ்வைத்தொலைத்தான்
பேருக்கும் பெருமைக்கும் ஆசைகொண்டு
வெட்டிப்பேச்சிலேயே காலத்தைக் கழித்தான்

அழைப்பதற்கறிய ஆறறிவுப் படைப்பதனை
அர்ப்பத்திற்காய் ஓரறிவுக் குறைத்தான்
ஆத்திரத்தையும் அவசரத்தையும்
அவனணியும் ஆடையெனத் தரித்தான்

மண் பிரித்தான் பொன் பிரித்தான்
மாருத இயல்பை மாசிட்டுக்கெடுத்தான்
பன்முகமுடையோரும் பருகிடும் நீரதனை
தன் குடம் நிறைவதற்காய் பாத்திக்கட்டித்தடுத்தான

தடுத்தான் கெடுத்தான் பிரித்தான்
தற்பெருமைப்பேசியே ஏதேதோ கொடுத்தான்
தலைசாய்ந்து கண்ணிருண்டு
சவமாகிப்போனபின்னே
தலைக்கீழாய் நின்றவனோ
எதைத்தான் எடுத்தான். ..?



கவிதை ஆக்கம் கவிஞர் தமிழ்ப்ரியன் நசீர்

No comments: