Wednesday, July 30, 2014

கடற்கரையில் காற்று வாங்க போனோம்! -இன்னபிற சங்கதிகளுடனுமாக பார்த்த கடல்.

 கடற்கரையில் காற்று வாங்க போனோம்!
பெருநாள் தினத்தின்
மாலை நேரம்
குமரி முஸ்லிம்களுக்கு
கடற்கரையில்
காற்று வாங்கும் நேரம் !

ஒவ்வொரு பெருநாள்
மாலை நேரங்களும்
கன்னியாகுமரி கடற்கரை
ஒரு பொதுக்கூட்டம் நடத்தும் அளவுக்கு
முஸ்லிம்களின் சங்கமத்தால்
நிரம்பி விடுகிறது !

நேற்றும் அப்படித்தான்...
நாங்களும் சங்கமம் ! 


Abu Haashima Vaver


 படத்தில் என்(Abu Haashima Vaver )மகன் அனஸ் மற்றும் பேத்தி ஹஸ்னா பேரன் ரசீன்
  இன்னபிற சங்கதிகளுடனுமாக  பார்த்த கடல்.

நீ கண்ட கடலல்ல
நான் கண்டது

மீன்பிடி தேர்ந்த
மீனவனின் கடலுமல்ல

உயிர்தப்பி ஓடிவந்த
அகதியின் கடலுமல்ல

கடலே வாழ்க்கையான
கடலாடியின் கடலுமல்ல

கள்ளத்தோணியில் கடத்தல் நிகழ்த்தும் சந்தர்ப்பவாதியின் கடலுமல்ல

ஆயினும் கடல்.
அத்தனை ஆகிருதியுடனும்
அத்தனை ஆழத்துடனும்
அத்தனை சூட்சுமத்துடனும்
அத்தனை இன்னபிற சங்கதிகளுடனுமாக
நான் பார்த்த கடல்.

நீ பார்க்கவில்லை
நான் பார்த்த கடலை..!!

நிஷா மன்சூர்

No comments: