Monday, July 14, 2014

யாரோ தூக்குகிறார்கள்

                      யாரோ தூக்குகிறார்கள்

புல்லட் துளைத்த முதுகுடன் செத்த ஒரு குழந்தையை
கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றிலிருந்து
தாயைத் துளைத்த புல்லட்
உள்ளே இருந்த குழந்தையையும்…

ரத்தக் களறியாய் குழந்தைகள், பெண்கள்…
இவை காஸாவின் நிகழ்காலக் காட்சிகள்

மனிதம் மிச்சமுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத காட்சிகள்
அவை இஸ்ரேலில் இருந்து யூதர்கள் அனுப்பும் வான்வழி மரணம்
தரைவழி மரணத்தையும் தரப்போவதாக தகவலும் உண்டு

ஒரு கோடி யூதர்களை ஹிட்லர் கொன்றது சரிதானோ என்று எண்ணத்தோன்றும் காட்சிகள்

ஆனாலும் ஹிட்லரை நியாயப்படுத்த முடியாது
இன்று யூதர்கள் செய்வதையும்தான்
அப்பாவிகளைக் கொல்வதை,
நிராயுதபாணிகளான பெண்களை, ஆண்களை
குழந்தைகளைக் கொல்வதை
யார்தான் நியாயப்படுத்த முடியும்?

நாம் என்ன செய்யலாம்?

இப்படியான சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
எழுதலாம், பேசலாம் – அது நமது கடமை
இறைவன் அந்த அநீதியாளர்களுக்கு தண்டனையளிப்பான் என்று நம்பலாம்
கொடுக்கவேண்டும் என்றுகூட பிரார்த்திக்கலாம்
இனி இப்படி யாரும் அவதிக்கு உள்ளாகக்கூடாது என்று பிரார்த்திக்கலாம்

கொஞ்சம் பின்னோக்கி இஸ்ரேலின் வரலாற்றைப் பார்க்கலாம்
இது கிமு காலத்திலிருந்தே இருந்து வரும் பகையாகும்

என் வீட்டில் ஒரு நூறு ரவுடிகள் ஆயுதபாணியாகப் புகுந்துகொண்டு
எங்களுக்கு வாழ்வதற்குக் கழிவறையை மட்டும் கொடுத்து
மீதி வீட்டை ரவுடிகள் ஆக்கிரமித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுதான் பாலஸ்தீன் விஷயத்தில் நடந்தது.

ஹிட்லரால் கொல்லப்படுவதற்கு
அஞ்சிய யூதர்கள்
கும்பல் கும்பலாக பாலஸ்தீனத்திற்குள்ளே வந்தார்கள். அகதிகளாக.
ஆலியா என்று அது கூறப்பட்டது.
இவ்விதம் ஐந்து ஆலியாக்கள் நடந்தேறின
யூதர்களால் முஸ்லிம்களைக் ’காலியா’க்கும் செயல்பாடுதான் ஆலியா

1948ல் இஸ்ரேல் என்ற ஒரு நாடு அப்படித்தான் உருவானது.

அதன் ஆக்கிரமிப்பு சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானது என
சர்வதேச நீதிமன்றம்கூட சொன்னது

ஒண்ட வந்தப் பிடாரிகள் ஊர் சீதேவியைக் கொல்கின்றன.

ஆனாலும் அந்த ஆக்கிரமிப்புக்கும் யூத அதிகார ஸ்திரப்பாட்டுக்கும்
’எல்லா வகையிலும்’ உதவி செய்தது, செய்கிறது சர்வதேச தாதா அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதிகளின் நிறம்தான் மாறுகிறது புஷ்ஷிலிருந்து ஒபாமாவுக்கு
ஆனால் அமெரிக்காவின் நிறம் எப்போதுமே மாறுவதில்லை

அப்பா வழியில் முஸ்லிம் ரத்தம் உடம்புக்குள் ஓடினாலும்
ஒபாமாவின் மனதுக்குள் யூதம் ஒளிந்துகொண்டுள்ளது

இஸ்லாத்தை எதிரியாகப் பார்க்கும் மனநிலைதான் யூத மனநிலை,
அதுதான் அமெரிக்க அதிகார மனநிலை
இஸ்லாம் அனுமதிக்காத, ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்ட, நடத்தப்படும்

முட்டாள்தனமான உயிர்க்கொல்லித் தீவிரவாதச் செயல்பாடுகளும் இதற்கு முக்கிய காரணம்

எல்லா முட்டாள்தனங்களும், அயோக்கியத்தங்களும், அவற்றின் விளைவான வன்முறைகளும் நிற்கவேண்டும்

ஏதுமறியாக் குழந்தைகள், அப்பாவியான பெண்கள் ரத்தக்களறியாய் கிடக்கும்
நிழல்படங்களை என்னால் எப்போதுமே பார்க்க முடிந்ததில்லை
அவை என்னை சாப்பிடவோ, தூங்கவோ விடுவதில்லை
என் ஆன்மாவை அவைத் துளைக்கின்றன
அவர்கள் முஸ்லிம்கள் என்பது காரணமல்ல
அவர்கள் குழந்தைகள், அவர்கள் பெண்கள், அவர்கள் ஆண்கள்
அவர்கள் அப்பாவி மனிதர்கள்
மனித நேயம் உள்ள அனைவரும்
அவர்களுக்காக பிரார்த்திப்போம்
அதற்கு நிச்சயம் பலனுண்டு
அந்தப் பலன் விரைவில் கிடைக்க
அவர்களுக்கு நிம்மதியும் அமைதியும் ஏற்படும் நாளுக்காக
காத்திருப்போம்
பிரார்த்தனைகளுடன்

  நாகூர் ரூமி Nagore Rumi

                                               நாகூர் ரூமி Nagore Rumi

No comments: