Sunday, August 17, 2014

பகவத்தின் போதை பரிகசிக்கப்படுகிறது பகவத் கீதை....

 
அமெரிக்காவில் உள்ளவர்கள்
அமெரிக்கர்கள்

அட
ஆமாம்
அமெரிக்கர்கள்தான்
சத்தியமோ சத்தியம்
மாத்துக் கருத்தே இல்லை

கனடாவில் உள்ளவர்கள்
கனடியர்கள்
அட
ஆமாய்யா
கனடியர்களேதான்
இதில் என்ன
பெரிய
கண்டுபிடிப்பு இருக்காம்
மூக்கொழுகும்
மூணுவயசுப் பிள்ளைகூட
மூக்கைத் துடைக்காமல்
முந்திக்கிட்டு ஆமாஞ் சொல்லுமே

இந்துஸ்தானில் உள்ளவர்கள்
இந்துக்கள்

அட
இங்கே என்னமோ இடிக்குதே
ஆமாம் என்று
சொல்ல முடியலியே

ஏன்?

இதுவரைக்கும்
ஒரு நாட்டோட பிரஜையை
எப்படி அழைப்பது என்று வர்ணித்தார்
மோகன் பகவத்

ஆமாம் ஆமாம்
என்று தலையைத் தலையைத்தான்
ஆட்டினோம்

இப்போ
ஏதோ மதத்துக்குள்ளார
சுளுவா போறாரே

ஏன்

புரிஞ்சுபோச்சு
கொஞ்சநாளேவே
ரத்த ஆறு வத்திப் போச்சுல்ல
அதான்
பாவம் பாத்துட்டார் பகவத்

பக்வத்
புதிய பகவத் கீதையை
உருவாக்குகிறாரோ

அடப்பாவி மனுசா
ஏன் உனக்கு
அந்த ஈனச் செயலு

இருக்கிற பகவத் கீதை
நல்லாத்தானே இருக்கு
நல்லதைத்தானே சொல்லுது?

அப்டீன்னா
நேபாளத்துல இருக்கிற
இந்துக்கள் எல்லாம்
இந்துக்கள் இல்லியா

அம்புட்டுப்பேரும்
மதம் மாறி
நேபாளி என்று
ஒரு புதிய மதத்தை
உருவாக்கணுமா

ஏண்டா பாவி
உனக்கு என்ன கேடு

நல்லாட்சி செய்வேண்ணு
உக்காத்தி வெச்சா
நம்பிக்கையில
மண்ணள்ளிப் போடுறியே
படவா

இந்தியர்கள்
பல கலாச்சாரம்
பல மொழி
பல மதம்
என்று பரந்துபட்டவர்கள்டா

என்றைக்குமே
அவர்கள்
ஒரே நிறத்தில் இருந்ததில்லை
ஆனால்
அத்தனை வர்ணமும் ஒன்றுசேர்ந்து
வாணவில்லாய்
ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள்

இந்தியாவுக்கு
ஒரு கேடு என்றால் போதும்
கூட்டுச் சேர்ந்து
வரிந்துகட்டிக்கொண்டு
வந்துவிடுவார்கள் வந்து

வேற்றுமையில் ஒற்றுமையை
வேறு எந்தநாட்டிலடா
இப்படி நீ காண்பாய்

அதைக்கெடுக்க வந்துட்டியே
பாவி படுபாவி

No comments: