Sunday, August 31, 2014

பணம் ஒன்றே குறிக்கோளாய்

பணம் ஒன்றே குறிக்கோளாய்
ஓடித்திரிந்த என்னை
உயிலெழுதக்கூட
அவகாசமின்றி
ஒரே நாளில்
முடக்கிப்போட்டது முதுமை.

இன்னும் சில நாட்களில்
நான் இறந்து விடுவேனாம்...
இப்போதுதான் என் ஆயுள்ரேகை
குறித்துவிட்டு போகிறார்
எங்கள் குடும்ப டாக்டர்.

சுற்றமும் நட்பும் சூழ
அழுகுரல்களுக்கு மத்தியில்
என் சொத்துக்களுக்கான
பாகப்பிரிவினை
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
என் வாரிசுகளுக்கிடையில்....

ஊரின் ஒதுக்குப்புறத்திலிருக்கும்
அந்த மாந்தோப்பு
மூத்தவனுக்காம்.
தென்னந்தோப்பும்,
ஓட்டுவீடும்
இரண்டாம் பையனுக்காம்.

நாங்கள் இப்போது இருக்கும்
இந்த வீடும், நிலமும்
கடைசி பையனுக்காம்.
வங்கி லாக்கரில் இருக்கும்
நகை முழுவதும்
என் ஒரே பெண்ணுக்காம்.

நகரின் மத்தியிலிருக்கும்
ஜவுளிக்கடையை
மகன்கள் மூவரும்
முறைவைத்து
பார்த்துக்கொள்வார்களாம்....

இத்தனையையும்
பிரித்துக்கொண்ட
என் வாரிசுகளில்
ஒருவர்கூட
தன்னை வேண்டுமென்று
சொல்லவில்லையே என்று
மூலையில் இருந்து
கண்ணீர் சிந்தும்
அவர்களின் அம்மாவாகிய
என் மனைவியை
எந்த மகனுக்கு நான்
உயில் எழுத?!

பணம் ஒன்றே குறிக்கோளாய்
ஓடித்திரிந்த என்னை
உயிலெழுதக்கூட
அவகாசமின்றி
ஒரே நாளில்
முடக்கிப்போட்டது முதுமை.

இன்னும் சில நாட்களில்
நான் இறந்து விடுவேனாம்...
இப்போதுதான் என் ஆயுள்ரேகை
குறித்துவிட்டு போகிறார்
எங்கள் குடும்ப டாக்டர்.

சுற்றமும் நட்பும் சூழ
அழுகுரல்களுக்கு மத்தியில்
என் சொத்துக்களுக்கான
பாகப்பிரிவினை
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
என் வாரிசுகளுக்கிடையில்....

ஊரின் ஒதுக்குப்புறத்திலிருக்கும்
அந்த மாந்தோப்பு
மூத்தவனுக்காம்.
தென்னந்தோப்பும்,
ஓட்டுவீடும்
இரண்டாம் பையனுக்காம்.

நாங்கள் இப்போது இருக்கும்
இந்த வீடும், நிலமும்
கடைசி பையனுக்காம்.
வங்கி லாக்கரில் இருக்கும்
நகை முழுவதும்
என் ஒரே பெண்ணுக்காம்.

நகரின் மத்தியிலிருக்கும்
ஜவுளிக்கடையை
மகன்கள் மூவரும்
முறைவைத்து
பார்த்துக்கொள்வார்களாம்....

இத்தனையையும்
பிரித்துக்கொண்ட
என் வாரிசுகளில்
ஒருவர்கூட
தன்னை வேண்டுமென்று
சொல்லவில்லையே என்று
மூலையில் இருந்து
கண்ணீர் சிந்தும்
அவர்களின் அம்மாவாகிய
என் மனைவியை
எந்த மகனுக்கு நான்
உயில் எழுத?!

#நிதர்சனத்துவம்.

ஆக்கம் ரஹீம் கஸாலி

No comments: