Tuesday, August 12, 2014

மதம் / மார்க்கம்

மதம் தவறான வார்த்தை அல்ல
மதம் என்ற வார்த்தை அதனோடு இணையும் வார்த்தையைப் பொறுத்து பல பொருளைத் தரலாம்
மதம் என்றால் மார்க்கம் என்று பொருளும் கொள்ளலாம்
மதங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.
நம்பிக்கை இல்லை என்றால் மதத்தில் பிடிப்பு இல்லை
நம்பிக்கைகள் அறிந்து வாழும் முறைக்கு நேர் எதிரானதாகவும் அமையும்
மதமே மனிதனுக்கு இறுதி அடைக்கலம்
மதம் ஒரு மனிதனுக்கு வழிகாட்டி ,ஏணி
மதம் கெடுதல் செய்வதை தடுக்கும் வேலி
மனிதன் போடும் சட்டங்களில் ஓட்டைகள் அதிகம்
மனிதன் அந்த ஓட்டைகள் வழியே வெளியே வந்து விடுகின்றான்
சட்டங்களும் ஓட்டைகளை அடைக்க பல விதிகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது
இறைவன் இயற்றிய சட்டங்களுக்கு மனிதனின் மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கின்றது
மனிதனாய் திருந்தினால் ஒழிய எந்த சட்டமும் எல்லா மனிதர்களையும் திருத்தி விடாது
சட்டம் இயற்றுபவனே குற்றம் செய்பவனாகவும்,
சட்டத்தை வைத்து தீர்ப்பு தருபவனே குற்றம் செய்பவனாகவும் மாறுவதை பார்க்கின்றோம்
இறை நம்பிக்கை உடையவனுக்கு இறை சட்டத்தில் தவறு காண்பதில்லை
இறை சட்டத்தில் விளக்கம் கொடுப்பவன் பல முறையில் விளக்கம் தருகின்றான் தனக்கு தகுந்ததுபோல்

மதத்தைப் பற்றி பேசுவதோ
மதம் சொன்னபடி வாழ்வதோ தவறில்லை
எந்த மதமும் தவறான வழிக்கு இட்டுச் செல்ல வில்லை
மதத்தினை அறியாதவன் தவறான விளக்கம் தருகின்றான்
அனைத்து மதமும் மனித நேயத்தின் அடிப்படையில் தான் உள்ளது

No comments: