Thursday, September 25, 2014

" உன் பங்கை நீ சரியாக செய்து விடு...

ஒரு நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது...சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் நான் சோர்ந்து, துவண்டு, தனிமையில் கலங்குவேன். என்னை தைரியப்படுத்தவோ. உற்சாகப் படுத்தவோ அன்பர்களும் நண்பர்களும் தயாரில்லை. ஒரு சமயம் அவர்களுக்கு அந்த திறமைகள் இல்லையோ, என்னவோ தெரிய வில்லை. இப்படியே நாட்கள் சென்றால் என் எதிர்காலம் என்னாவது...என்னை உற்சாகப் படுத்த வேண்டியவர்களே காலத்தின் கோலம் என்பார்களே அதன் கடைநிலைக்கு வந்துவிட்டதால்...படைத்த இறைவனே என்னை உற்சாகப் படுத்தினால் தான் உண்டு..என்ற நிலையில்...ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் இன்று என்னை தைரியசாளியாகவும் வாழ்வில் எனக்கு ஒரு பிடிப்பையும் தந்தது என்றார்.


  அது என்ன வெனில் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன் அமர்ந்து..கண்ணாடியில் தெரியும் தன பிம்பத்தை பார்த்து...." ஏன் நீ கவலை பட்டுக்கொண்டிருக்கிறாய், இப்படி கவலை பட்டுக்கொண்டே இருப்பதால் இன்னும் பல பிரச்சினைகள் உனக்கு வந்து விடாதா...? அதனால் நடந்ததை எல்லாம் மறந்து விடு ..." பிரச்சனைகளை அவர்களிடமே பேச்சி தீர்க்கப் பார்...பிறருக்கு நீ செய்த உதவிகளும், நன்மைகளும் உன்னை கை விட்டு விடுமா என்ன ?....ஏன் கலங்குகிறாய் ...தைரியமாக இரு..."
 " உன் பங்கை நீ சரியாக செய்து விடு...இறைவன் அவன் பங்கை சரியான நேரத்தில் நிச்சயம் உனக்கு செய்து விடு வான் ..நம்பு...."
என அடிக்கடி சொல்லி இன்று இப்போது இறை அருளால் தன்னம்பிக்கை + தைரியசாலியாக இருக்கிறேன்....என்றார். ..
Ashraf Ali Nidur
****************************************************

எனது நட்புச் சொந்தங்களே...இறைவன் அருளாலும், உங்கள் அனைவரின் துவா பரக்கத்தாலும் எனது இரு மகன்களுக்கும் வல்ல ரஹ்மான் கல்விச் செல்வத்தை வாரி வாரி வழங்கியுள்ளான். இதற்காக முதற்கண் இறைவனுக்கும்...தொடர்ந்து எம் குடும்பத்தினரின் மீது பாசம் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...பணிவுடன் அஷ்ரப் அலி நீடூர் நெய்வாசல்.
Ashraf Ali Nidur
  அண்மையில் துபாயிலிருந்துபுறப்பட்டுவந்து தன் மகனை எஞ்ஜீனீரிங்கல்லூரியில் சேர்ப்பதற்காக எனது நண்பர்சிதம்பரம்நசீர் சென்னையில் முகாமிட்டு ஒருவார காலம் தங்கியிருந்தார்!

சென்னையில் தங்கியிருந்த நாட்களில் தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக என்னிடமும் யோசனை கேட்டு அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து எனக்கு தினமும் காலையில் போன் செய்வார்,நானும் தலைநகரில் சில தரமுள்ள கல்லூரிகளின் பெயர்களை (நான் விசாரித்து அறிந்த வகையில்)கூறி சிபாரிசு செய்வேன் !

வேறு சில கல்லூரிகளிலும் தன் மகனுக்கு சீட் தேடி கொண்டிருந்தநண்பரின் மகனோடு சென்னையில் ஆவடி ஆலிம் முகம்மது ஸாலிஹ் கல்லூரிக்கும் சென்றோம்!

அப்போது அந்த கல்லூரியில் சேர்க்க அங்கிருந்த நிர்வாகியிடம் விண்ணப்ப பாரம் பணம் கட்டி வாங்கியபோது அந்த கல்லூரியின் விபர குறிப்பேட்டு புத்தகத்தையும் என் நண்பர் தன் கையில் வைத்திருந்ததை கவனித்தபோது எனக்கு அந்த அட்டைப்படத்தில்இருந்த மாணவரின் படம் ஆச்சர்யத்தை அளித்தது ! ஆம்,அதில்இருந்த என் நண்பர் நீடூர் அஷ்ரஃப் அலியின் இளையபுதல்வர் ஆஷிக்கின் பிரதான தோற்றகாட்சி எனக்கு மிக்கமகிழ்வை தந்தது !

அதை என் நண்பரின் கையிலிருந்து வாங்கி அந்த புகைப்படத்தில் உள்ள ஆஷிக் பற்றிய விபரத்தை(அந்த கல்லூரியில் ஆஷிக் இந்த வருடம் எம் பி ஏ படித்து முடித்து தேர்வானது பற்றி) நண்பரிடம் சுட்டிகாட்டி பேசி கொண்டிருந்தபோது அந்த கல்லூரியின் பேராசிரியர் (பெயர் கேட்க மறந்துட்டேன்)ஒருவர் எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தவர் நான் நண்பரிடம் பேசிகொண்டிருந்ததை காதில் வாங்கியவர்....எங்கள் கல்லூரியின் சென்ற வருடத்தின் சிறந்த மாணவர்களை சிறப்பு புத்தக குறிப்பேட்டில் அட்டைப்படத்தில் இடம் பெற செய்வோம் ! அந்த மாணவர் ஆஷிக் உங்கள் உறவினரா அவருக்கு என் வாழ்த்துக்கள் என்றார் ! ஆம் ஆஷிக் என் வாழ்த்தும் கூட உனக்கு ...
தந்தையை மிஞ்சும் தனயனாக புவியில் பெயர்பெற்று வாழ இந்நாளில் !

No comments: