Tuesday, October 7, 2014

செல்வாக்கு !

அரசியல்வாதிகள் முதல்
ஆளுமைக்கும்
அத்தனை நல வாதிகளுக்கும்
தார்மீகப் பொறுப்பெடுத்து
தாங்கி வருமாம் செல்வாக்காய்

மனித வாழ்வை மேம்படுத்த்தி
மக்கள் மத்தியில் மதிக்கவைக்கும்
மந்திரச்சொல் இதுவன்றோ

புண்ணியவான் புகழ்பெறவும்
கண்ணியவானைக் காப்பதும்
செல்வாக்கு தானன்றோ
பணத்தால் ஏற்ப்படும் செல்வாக்கு
தலைக் கனத்தால் மறைந்திடும் நீ நோக்கு
குணத்தால் பெற்றிடும் செல்வாக்கு
குறைவில்லா அன்பைப்பெரும் நீரூற்று

மனத்தால் வந்திடும் செல்வாக்கு
மதியால் நிலைத்திடும் பொற்க்கோப்பு
இனத்தால் வந்திடும் செல்வாக்கு
இன்னலைத் தந்திடும் மனக்கசப்பு

சொல்வாக்கை தவற விட்டால்
செல்வாக்கு குறைந்துவிடும்
நல்வாக்கை நாமளித்தால்
செல்வாக்கு மேலோங்கும்

செல்வாக்கைப் பெற்றிடவே
அருள்வாக்கை நாடிடுவர்
நம்வாக்கு நிலைபெற்றால்
அருள்வாக்கு நமக்கெதற்கு

செல்வாக்கில் உயர்ந்திடவே
சொல்வாக்கில் நிலைவேண்டும்
இல்வாழ்வில் சிறந்திடவும்
செல்வாக்கு நிலைக்க வேண்டும்

இவ்வாழ்வைத் தொலைத்தவரும்
இழிவாகி நிற்ப்பவரும்
நல்வழியைத் தேடாதவரும்
நலமாய் உலகில் வாழாதவரும்
செல்வாக்கை இழந்தவரே
செயல்பாட்டில் தோற்றவரே
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 11-09-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 5 வது  நிமிடம் 27வது நொடியில் வாசிக்கப்படுகிறது.

No comments: