Wednesday, December 31, 2014

காலப்பரிசு/ வெளி / தாஜ்

காலப்பரிசு/ வெளி / தாஜ்
-----------------------
மண்டைக் குத்தலில்
மூச்சுவிட பரிதவித்த நாளில்
கோப்புகளின்
சிதைவை அறிந்தேன்
ஆக்கங்கள் பல
குலைந்து போக
செல்லரித்து
படிமங்களின் அடுக்கும்
காற்றின் திசைக்கு நழுவி விட
வசீகரப் பக்கங்களும்
வானத்தைத் துருவிய
கேள்விகளும் தொலைந்து...
பத்திரப் படுத்திய
கவிதை நாட்களையும் காணோம்.
***************************
கவிதை:

வெளி / தாஜ்
-------------------
கையளவு தண்ணீர் மொண்டு
தாகம் தணிக்கவும் தவிப்பு.
பெருவெள்ளச் சுழிப்பில்
மனித மிருகங்களுடன்
மூர்த்திகளும் கீர்த்திகளும்
கரைப் புரள்கிறது.

மண்ணில் நித்தம்
கேள்விகளால்
பஞ்சப் பூதங்களையும்
ஆய்ந்தாகிவிட்டது.
ஐந்து நிலங்களை அலசி
இனி ஆவப்போவதுமில்லை.

தகிப்பின் உஷ்ணம்
நெருப்பாய் பற்றி மேவும்
முடை நாற்றக் காற்றில்
சுவாசம் தினறுகிறது.
வானின் வெண்மையிலும்
புகை மூட்டக் கரிக்கோடு.
தனி உதயமென்றொன்று
சுத்தமாய்
எதுவுமில்லை நமக்கு.

***

Taj Deen

No comments: