Friday, December 5, 2014

தூரதேசத்து சொந்தங்கள்....! (அரபு அமீரக அபுதாபி துபாய் படங்கள் இணைப்புடன் ) -ராஜா வாவுபிள்ளை

நினைவுகள் நிழலாடும்
நிதானித்து நினைக்கும்
நின்று நினைத்து
நிம்மதி தேடும்

மனவழி தொடர்புகள்
நேரில் காணல்கள்
உள்ளோட்ட புரிதல்கள்
நிதர்சன நடமாட்டங்கள்

தேடி ஓடும்
கண்டதும் ஒட்டும்
ஆனந்த மழை பொழியும்
காலம் கதைகதையாய் சொல்லும்

விதியின்படி விரிந்த உலகில்
பிரிந்து கிடந்தாலும்
இணைக்கும் பயணப்பாலங்கள்
பின்னிப் பிணைக்கட்டும் சொந்தங்களை
அரபு அமீரகத்தில் அபுதாபி

வளர்சியில் முதலிடம் வானளாவிய கட்டிடங்கள் சாட்சி அளிக்கின்றன.

உலகத்திலேயே மிகவும் அதிகமான செலவாகும் நகரம்.

தரமானதை பெறவேண்டுமானால் அதிகமாக செலவு செய்துதான் ஆகவேண்டும்.

கட்டுப்பாடு, கலப்படம் இல்லாமை (தங்கத்திலும் கூட) நேர்த்தி, நேர்மை, வேலை இல்லாமை, சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு அனைத்தையும் தருவது தானே அரசின் கடமை ?

இவை யாவும் இருந்தால் அதிக செலவு பொருட்படுத்த வேண்டியது அல்லவே?








 அரபு அமீரகத்துக்கு எத்தனை முறை சென்றாலும் நுனிப்புல் மேய்ந்த நிலைதான் உணருகிறேன்.

ஒவ்வொரு முறையும் புதிய அபரிமித வளர்ச்சியின் வெளிப்பாடுகள்.

அபுதாபி நகரத்து வீதிகளில் உலா.


துபாயில் சற்றுமுன் கண்டு களித்த வானவேடிக்கை
குளோபல் வில்லேஜ் கிளிக்குகள்.
உங்கள் பார்வைக்கு:
குளோபல் வில்லேஜ் பற்றிய விரிவான குறிப்புகளை பின்னர் பார்க்கலாம்




ராஜா வாவுபிள்ளை(சங்கம் அப்துல் காதர்)
*******************************************************************************************
 

No comments: