Saturday, December 6, 2014

எழுதி என்ன பயன்?


எழுதி என்ன பயன்?
எவரை அடைய வேண்டுமோ
அவரை அடையா எழுத்தை
எழுதி என்ன பயன்?

பேச்சாளன், செயல்வீரன்,
எழுத்தாளன் இல்லாத-நான்
எழுதி என்ன பயன்?

எத்தனையோ பிழைகள்
என்னோடும் என்ற பின்
எழுதி என்ன பயன்?

பலகீனஞ்சில தோல்வி பல
கொண்ட கண்ட - நான்
எழுதி என்ன பயன்?

இன்னும் எத்தனை கேள்விகள்!
இறுதியில் ஒரே கேள்வி
எழுதி என்ன பயன்?

காந்தி இதை அன்று
கேட்டு இருந்தால் இன்று
"சத்தியசோதனை" இல்லை

நேரு கேட்டு இருந்தால்
"டிஸ்கவரீ ஆஃப் இன்டியா"
நம்கையில் இல்லை.

மார்க்கோ போலோ கேட்டு
இருந்தால் தமிழர் வரலாறு
இன்று உருமாறி புராணமாய்!

தொடக்கத்தில் எவரும் புள்ளிகளே,
தொடங்கிய பின் புத்தகமாக
நல்லோர் படிக்கும் பாடமாக..

ஆம் எழுத்தின் அவசியம்
இருக்கிறது இன்றும், என்றும்.
ஏற்பது காலத்தின் கைகளில்!

ஆம் எழுதி என்ன பயன்?
கடமையைசெய் பலனைதேடாதே...!
கவிதை ஆக்கம் Rafeequl Islam T

No comments: