Sunday, January 18, 2015

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து



 பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம்
 
பாரீஸ் நகருக்குச் செல் பவர்கள் அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்துக்கு
நிச்சயம் செல்வார்கள். அது ஒரு கலைப் பொக்கிஷம். மோனோலிசா ஓவியம்கூட அங்குதான் இருக்கிறது. பிரபல ‘டாவின்ஸி கோட்’ புதினம் இந்த
மியூசியத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றால் சிலருக்குப் புரியக்கூடும்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குவியும் இந்த அருங் காட்சியகத்துக்கு
போயிருந்த போது ஒரு கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓர் இடத்தில்கூட ஆங்கில அறிவிப்பு கிடையாது. அந்த அளவுக்குத் தங்கள் மொழி யான பிரெஞ்சு மீது வெறித்தனமான அபிமானம் அவர்களுக்கு. தவிர ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வரலாற்றுப் பகை இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கலாம் என்பது கூடுதல் காரணம்.
ஆனால் ரொம்பவும் தொடக்க காலத்தில் பிரான்ஸ் நாட்டின் மொழி பிரெஞ்சு கிடையாது.


இப்போதுள்ள பிரான்ஸ் பகுதியில் அப்போது இருந்த நாட்டின் பெயர் கால் (Gaul -
ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ் படித்தவர்களுக்கு இந்த நாடு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்). அப்போது பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்றவைகூட இந்த நாட்டின் பகுதிகளாக இருந்தன. அங்கு பேசப்பட்ட மொழி ஸெல்டிக். ரோம சாம்ராஜ்யம் பரந்து விரிந்த காலகட்டம். கால் நாட்டை மட்டும் சும்மா விடுமா? அந்த முழு தேசத்தையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தது ரோம். இது நடந்தது கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு.
வேறு வழியில்லாமல் ரோம் மொழி மற்றும் ரோமானிய கலாச்சாரத்துக்கு தங்களை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள் கால் மக்கள்.
ரோமானியர்கள் தங்கள் கைவரிசையை கால் நகரில் காட்டினார்கள் -
நல்லவிதத்திலும் தான்! பிரம்மாண்டமான கட்டிடங் களும் அரங்கங்களும்
எழும்பின.
பின்னர் சில காட்டுமிராண்டிக் கூட்டங்கள் அவற்றில் பலவற்றை
அழித்துவிட்டாலும் இன்னமும் சில அருமையான மிச்சங்களை பிரான்ஸில் காணமுடியும். முக்கியமாக மூன்று அடுக்கு கொண்ட நீர்த்தொட்டிகள், ரோன்
பள்ளத்தாக்கில் உள்ள பிரம்மாண்ட நாடக அரங்கு, நிமஸ் என்ற இடத்திலுள்ள
ஆலயம்.
சில நூற்றாண்டுகள் நகர்ந்தன. மன்னன் குலோவிஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட பிராங்க் இனத்தவர் கால் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இந்த பிராங்க் இனத்தவர் ஜெர் மானிய குடிகளில் ஒரு வகையினர்.
பிராங்க் இனத்தவர் அந்தப் பகுதியை ஆக்ரமித்தவுடன் இந்தப் பகுதியை சில சிறிய பகுதிகளாகப் பிரித்தனர். பெயர் மாற்றம் நடைபெற்றது. அவர்கள் பெயர் அல்ல -
நாட்டின் பெயர். மேற்குப் பகுதிக்கு ‘பிரான்ஸியா’ என்று பெயரிட்டனர். ஆக,
கால் போச்சு பிரான்ஸ் வந்தது.
அப்போதுகூட பிரெஞ்சு அதிகாரபூர்வ மொழி ஆகிவிட வில்லை. ஆனால் கி.பி.1000-ல் பிரான்ஸை ஆண்ட மன்னன் பிரான்ஸியன் என்பவனுக்கு தீவிர மொழிப் பற்று. அவன்தான் பிரெஞ்சு மொழியை குறைந்தபட்சம் உயர் வகுப்பினராவது பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினான். லத்தீனிலிருந்து பலவிதங்களில் மாறுதல் பெற்று புதிய வடிவமாக உருவாகியிருந்தது பிரெஞ்சு. இது பிரான்ஸின் அதிகாரபூர்வ மொழியானது.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? ‘வேறு யாராவது அந்த
நாட்டின் மீது படையெடுத்திருப்பார்கள்’ என்கிறீர்களா? அதேதான். இந்த முறை அதைச் செய்தது வைகிங் இனத்தவர். பிரான்ஸின் வடக்குப் பகுதி மீது இவர்கள் கண் வைத்தார்கள். வைகிங் இனத்தவர் ஸ்கான்டிநேவியா பகுதியில்
வேர்விட்டவர்கள். (நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் ஸ்கான்டிநேவியா).
சமாதானமாகப் போக விரும் பினார் பிரெஞ்சு மன்னன். தன் தேசத்தின் கணிசமான பகுதியை வைகிங் மன்னர்களுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டார். அப்படி அளிக்கப்பட்ட பகுதியில் குடியேறியவர்கள் நாளடைவில் நார்மன்ஸ் அல்லது நார்ஸ்மென் என்று அழைக்கப்பட்டது தனிக்கதை. காலச் சக்கரம் வழக்கம்போல் உருண்டது. 1666-ல் நார்மன் இனத்தைச் சேர்ந்த வில்லியம் என்ற ஒருவர் இங்கிலாந்தை ஆக்கிரமிப்பதற்காக கிளம்பினார். இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ‘வில்லியம் தி கான்கோரர்’. அதாவது வென்று கொண்டே இருக்கும் வில்லியம்! அவ்வளவு நம்பிக்கை.
‘’சுற்றி வளைத்துப் பார்த்தால் இங்கிலாந்து மன்னருக்கு நானும் உறவு. எனவே எனக்கும் வாரிசுரிமை இருக்கிறது’’ என்று கிளம்பினார்.
நடைபெற்றது ‘ஹேஸ்டிங்ஸ் யுத்தம்’. இது என்ன புதிதாக ஒரு கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். யுத்தம் நடைபெற்ற இடத்தின் பெயர் அது. தன் பெயருக்கேற்ப வில்லியம் ஜெயித்தார். அடுத்த 400 வருடங்களுக்கு இங்கிலாந்தின் ஆட்சி மொழி பிரெஞ்சுதான். இந்த காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் பல பிரெஞ்சு வார்த்தைகள் புகுந்தன அதாவது புகுத்தப்பட்டன. காலம் தொடர்ந்து நகர்ந்தது. பிரெஞ்சு ராணியான எலியனார் என்பவர் கணவனை விவாகரத்து செய்தது ஒரு வரலாற்றுத் திருப்பமானது. காரணம் அவர் விவாகரத்து
செய்த லூயி ஒரு பிரெஞ்சு மன்னன். அவர் மறுமணம் செய்து கொண்ட இரண்டாம்
ஹென்றி ஓர் ஆங்கிலேய மன்னன். இதன் காரணமாக, அந்தக் கால நியதிப்படி
பிரான்ஸின் கணிசமான பகுதியும் முழு இங்கிலாந்தும் எலியனாருக்கு வந்து
சேர்ந்தது. விவாகரத்து காரணமாக வந்தது பிரான்ஸ் பகுதி. மன்னன் ஹென்றி
இறந்துவிட அவரிடம் வந்தது இங்கிலாந்து. தன் மகன் ரிச்சர்டை மன்னனாக்கி விட்டு. ஆலோசகர் என்ற பதவியை ஏற்றார் எலியனார். இந்த ஆட்சியில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இசைக் கலைஞர்களும், கவிஞர் களும், ஓவியர்களும் ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்தக் காலத்தில் உருவான இசை ஸ்டைல் இன்றள வும் உரு மாறாமல் இசைக்கப் படுகிறது.
எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வந்து தொலைக்குமே! ஒன்றல்ல இரண்டு பிரச்னைகள் பிரான்ஸை சின்னாபின்னமாக்கின.

நன்றி  http://tamil.thehindu.com

No comments: