Sunday, February 1, 2015

இருப்போர் விலகி இல்லாதோர்க்கு வழி விடுங்கள்.

உதவி:

மனிதர்களிடையே உதவும் மனப்பான்மை குறைந்து விட்டதா.

ஆம் இன்று அது கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
யார் காரணம் கொடுப்பவனா? பெறுபவனா?

என்னை கேட்டால் பெறுபவன் என்று தான் சொல்வேன்.அத்தியாவிசிய தேவை போக இன்று பலர் ஆடம்பரங்களுக்காகவும், பொய்களை சொல்லியும் யாசகம் கேட்கிறார்கள்.
இவர்களின் இச் செயலால் உண்மையான யாசகமும் மறுக்கப்படுகிறது.

கடனை பொறுத்தவரை பலர் அதை திருப்பி செலுத்துவதில்லை.இன்று கடன் வாங்குவோரில் நிறைய பேர் சொத்து வாங்குவதற்க்கும் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவற்குமே பயன் படுத்துகிறார்கள்.

பலரின் இம்மாதியான செயல்களால் சிலரின் உண்மையான தேவைகளும் இருப்பவனால் மறுக்கப்படுகிறது.

கடனோ யாசகமோ பெற்றவன். கொடுத்தவன் கண் முன்னே அந்த பணத்தை அனாவசியமாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்யும் போது.கொடுத்தவனுக்கு கோபம் வருவது இயற்கை தானே.

பலரின் தவறால் சிலர் பாதிக்கப்படுவது என்னவோ உண்மை என்றாலும்.உதவும் மனப்பான்மை குறைந்து வருவதற்கு உதவி நாடுவோரே காரணம்.

(கொடுத்து நொந்து போன என் நண்பர் ஒருவர் இன்று என்னிடம் சொல்லி வருத்தப்பட்டதை உங்களிடம் நாசூக்காக பகிர்கிறேன்)

இருப்போர் விலகி இல்லாதோர்க்கு வழி விடுங்கள்.

                                                                           ஆக்கம்  Jaffarullah Jafar

No comments: