Saturday, April 18, 2015

திரு.S. முனிர் ஹோதா IAS

                                             திரு.S. முனிர் ஹோதா IAS

தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலை சிறந்த நிர்வாகி இவர்.குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக இவர் பதவி வகித்த போது மாவட்ட நிர்வாகத் திறனில் இவர் காட்டிய அக்கறை குமரி மாவட்ட மக்களால் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.
தமிழக ஆட்சி அமைப்புகள் மத்திய அரசால் கலைக்கப்படும் போதெல்லாம கவர்னரின் ஆலோசகர்களுக்கே ஆலோசனை வழங்கும் இடத்தில் இவரையே மத்திய அரசு தேர்ந்தெ டுத்து நியமனம் செய்திருக்கிறது. ஒரு முதல மைச்சர் நிர்வகிக்க வேண்டிய அனைத்து துறைகளையுமே, மிகவும் லாகவமாக கை யாண்டு துரிதமாக முடிவெடுக்கும் இவர் திறன் கண்டு அரசு நிர்வாகமே வியந்ததுண்டு
மாநில நிர்வாகத்தில் இவர் வகிக்காத பதவி களே இல்லை எனலாம். பதவியால் சிலர் பெருமை அடைகின்றனர். ஆனால் இவரால் பதவிகள் பெருமை பெற்று இருக்கின்றன.

சென்னை பெருநகர மாபெரும் வளர்ச்சிக்கு, இவரது ஆக்கபூர்வமான திட்டவடிவுகளே முக்கிய காரணம்.போக்குவரத்து துறை, பொது சுகாதாரம் போன்ற துறைகளில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. தமிழக உள்துறை செயலாளராக இவர் பதவி வகித்த போது மாநில போலீஸ் நிர்வாகம் தலை நிமிர்ந்து நின்றது. அந்நாளில் மாநிலத்தில் சிறந்த போலீஸ் துறையை நிர்வகித்த பெருமை இவரையே முற்றிலும் சாரும்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சீர் படுத்த பதினைந்தாயிரம் கோடி மதிப்பிலான புகழ் வாய்ந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு
(CHAIRMAN) மத்திய மாநில அரசுகள் ஒரு மனதாக இவரையே பரிந்துரை செய்தன. சென்னை மாநகரை பிரமிக்க வைக்கும் இந்த மகா திட்டத்திற்கு செயலாக்கம் கொடுத்தவர் இவர். இவரின் திறமையை அறிந்த கலைஞர் இவரை தனது அந்தரங்க பிரதம ஆலோசகர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மையாளர் முனிர் என்பது ஒன்றே அரசியல்வாதிகள் இவரைப் பற்றி சொல்லும் விமர்சனம்.
அதற்கு தகுந்தார் போல் தமிழக தலைமை ஆணையர் பதவி இவரைத் தேடி வந்தது. இன்றைய தேர்தல் அமைப்பு சிறப்புடன் செயல்பட இவர் அமைத்துக் கொடுத்த வியூகமேஅகில இந்தியாவுக்கும் துணை புரிகிறது.
தமிழக ஆட்சி மாறியவுடன் தானாகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்த பெருமகன் இவர். அன்றைய முதல்வர் ஜெய லலிதாவை நேரில் சந்தித்து, அவருக்கு வாழ்த்து சொல்லி விட்டு தனது இராஜினாமா கடிதத்தை நேரடியாக சமர்ப்பித்த இவரது துணிச்சல் கண்டு முதல்வர் கூட சற்று திணறித்தான் போனார் என்பது உண்மை.
ஓய்வு வேண்டும் என்று இவர் விரும்பினால் கூட பதவிகள் இவரை விடுவதாக இல்லை.
அக்னி குழுமங்கள் தலைமையின் கீழ் இயங்கும் கல்வி கூடங்கள் அனைத்துக்கும் இவரே பிரதம ஆலோசகர். புகழ் பெற்ற சென்னை SIET கல்லூரி நிர்வாகம் இவரை பிரதம செயலராக போட்டியின்றி தேர்வு செய்து கெளரவித்திருக்கிறது. அந்த கல்லூரி தரத்தை முதன்மை நிலைக்கு உயர்த்திய பெருமை முழு அளவில் இவரையே சாறும்.
காட்சிக்கு எளியராக தோன்றும் இவர் எந்த ஒரு பொது இடத்திலும், புதிய மனிதர் சந்திப் பிலும் தன்னை ஒரு IAS அதிகாரி என்று அறிமுகம் செய்து கொள்வது இல்லை. டெல போனில் பேசும்போது கூட பெயர் சொல்லி
"நான் IAS அதிகாரி பேசுகிறேன்" என்று ஆணவத்துடன் அதிகார கூச்சலிடும் அதிகாரி கள் மத்தியில் இந்த பெரிய மனிதனின் பண்பான அடக்கம் கண்டு பலமுறை நான் வியந்து போயிருக்கிறேன். தனது குடும்ப பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் ஏழை எளிய மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களது கல்வி வளர்ச்சிக்கு பொரு ளுதவி செய்து வரும் இவரது தன்னலமற்ற அடக்கம் அதிகாரிகளிடம் நான் கண்டிறாத அதிசய பண்பாகும்.
ரஜனிகாந்த் ஒரு படத்தில் பாடுவார்...
"சுட்டாலும் சங்கு நிறம்
எப்போதும் வெள்ளையடா,
மேன் மக்கள் எப்போதும்
மேன் மக்கள் தானே".
இது என் நண்பர் முனிர் ஹோதாவுக்கு முற்றிலும் பொருந்தும் என்று நான் மிக உறுதியாக நம்புகிறேன்.
புகைப்படங்கள் சென்னை அக்னி பொறியியல் கல்லூரி விழாவில்
நேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு சிறப்பித்த மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர்


DR. A.D.J. அப்துல் கலாம் அவர்களுடன்
முனிர் ஹோதா IAS அவர்கள்
கட்டுரை ஆக்கம்

                                                                    Vavar F Habibullah

No comments: