Saturday, May 16, 2015

வீரம் பணிந்த வரலாறு

"இஸ்லாம் வாளால் தான் பரப்பப் பட்டது" என்ற குற்றச்சாட்டு... சில மேல் நாட்டு வர லாற்று ஆசிரிரியார்களால், அவ்வப்போது உலக மத வரலாறு பற்றிய ஆய்வரங்குகளில்,
நடக்கும் கருத்தரங்கங்களின், விவாதப் பொ ருளாக, இன்றும் எடுத்துக் கொள்ளப்படும் ஒரு சிறப்பு தலைப்பாகும்.
இஸ்லாம் அரபகத்தில் கால் பதித்த நேரம் அது. இஸ்லாம் என்றால் பொருள் என்ன? என்று கேட்டோருக்கு, அது அமைதி என்று அமைதியாக பதில் உரைத்தோரை, எதிரிகள் குரல்வளை நெரித்து, கொடூரமாக கொன்று குவித்து, அவர்களின் இரத்தத்தை, மாமிசத் தை, ஈரல் குலைகளை, சுவைப்பட, இரத்த சுவையோடு மென்று, சுவைத்து விழுங்கி தங்கள் கோரப்பசி ஆற்றி மகிழ்ந்த காலம் அது.

"இறைவன் ஒருவன்" அவனுக்கு 'இணையும் துணையும்' இல்லை, என்ற இஸ்லாத்தின் அன்றைய பகுத்தறிவு கருத்துக்களை, அக் கால அரபிகள் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை. முகமது நபியின் சொந்த உறவுகளே, அவரின் இந்த இறை தத் துவத்தை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
365 கற்சிலைகளை, மக்காவின் புனித கஅபா ஆலயத்தில் அமைத்து,நித்தமும் ஒரு இஷ்ட பெண் தெய்வத்தை, பாலபிசேகம், நெய்யபி சேகத்தால் குளிப்பாட்டி, விளக்கேற்றி, நிர் வாண கோலத்தில், குதூகலமாக வலம் வந்து குலவையிட்டு, மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து, வழிபாடு நிகழ்த்தி மகிழ்ந்த வர்கள்,முகமது நபியின் உற்றாரும் உறவின ரும் ஆவர். அவர்கள் தான் முகமது நபியின்
"ஒரே இறைவன்" கொள்கைக்கு எதிராக வாள் ஏந்தி போர் புரிந்தவர்கள் என்பது உண்மை வரலாறு. இஸ்லாத்தின் புனித போர்களாக கருதப்பட்ட பத்று, உஹது போர் களங்கள் வரலாறாக உருவாக, இந்த போர் வரலாறே காரணம்.
1400 வருடங்களுக்கு முன்னால்........
முகமது நபியின் ஆணையை ஏற்று அரபகத்தின் மதீனா அருகில் அமைந்த, கைபர் நாட்டுக்கு தன் பரிவாரங்கள் சூழ,நபியின் நல் லெண்ண தூதுவராக செல்கிறார் இமாம் அலி.
இனவெறியும், மதவெறியும் தலைவிரித்து ஆடிய இடம் அது. ஏராளமான ஆயுத கிடங்கு களை கைவசம் வைத்து கொண்டு, இனவெறி யை தூண்டி,அப்பாவி மக்களை ஈவிரக்க மினறி,கொன்றொழிப்பது ஒன்றையே தன் குலத் தொழிலாக கொண்டு வாழ்ந்த ஊர் அது.
அப்பாவி முஸ்லிம்களை குறி வைத்தே இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.இந்த வெறி யாட்டத்தை தலைமை ஏற்று நிகழ்த்தியவன்,
மர்ஹப் என்ற யூதன். வீரத்திலும் வாள் வீச்சி லும் வல்லவன்.அராபியர்கள் வாள் வீச்சில் வல்லவர்கள்.வாள் போரில் வெற்றி பெருபவ னே,உண்மை வீரன் என்று எண்ணும் பண்பி னர்.அவனையே, தங்கள் தலைவனாக ஏற்று கொள்ளும் குணத்தினர். உண்மையில், மர்ஹப் வாள் வீச்சில் வல்லவன் தான். அவனை வெற்றி கொள்வோர் எவரும் கை பர் ஊரில் இல்லை எனலாம்.
ஒரு சமாதான, நல்லெண்ண தூதராகவே இமாம் அலி, கைபர் ஊருக்குள் நுழைகிறார்.
சொல்லின் செல்வரான இமாம் அலி, இஸ் லாத்தின் கொள்கைகளை பக்குவமாக, மர்ஹப் முன் எடுத்து வைக்கிறார்.மர்ஹப், அலியின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்ப தாக இல்லை.
"வீரர்கள் முன் வாதமோ அல்லது விவாதமோ செய்ய எனக்கு விருப்பமில்லை. முஸ்லிம் களின் இரத்தத்தை குடித்தே, உயிர் வாழ்பவன் நான்! உன் உபதேசம் எனக்கு தேவையில்லை
நான்வீரன், நீரும் வீரர் என்று அறிவேன். என் மக்கள் முன்னிலையில் வார்த்தைகளால் மோத வேண்டாம்.. நீர் தயார் என்றால் நாம், வாளால் மோதிக் கொள்வோம். முடிந்தால் வாளால் என்னை வெற்றி கொள்ள இயலுமா என்று முயன்று பாரும்." மர்ஹபின் வாயிலிருந்து சூடான வார்த்தைகள் தெரித்து விழுந்தன.
இமாம் அலியின் பக்குவமான வார்த்தைகள், மர்ஹப் முன் எடுபடவில்லை.பொறுமை யின் சிகரத்தின் முன், வீரம் பணிந்து வணங்கி யது.வீரம் முழுவதும், அலியின் கரங்களை ஆரத்தழுவிக் கொண்டது. சொல்லின் செல் வரான இமாம் அலி, நொடிப் பொழுதில் வாளின் செல்வரானார்.வீரத்தின் விளை நிலத்தின் கரங்களில் வாள் பரவசப்பட்டது. உயிர் பெற்றது, ஒளி பெற்றது. அடங்கி கிடந்த அலியின் வாளுக்கு வீரம் கொப்பளித் தது.அது உறையை விட்டு துள்ளி எழுந்ததது. வீரரின் கைகளில் தவழ்ந்தது, பின் சூறா வளி போல் சுழன்றது.மர்ஹபின் கோட்டை கதவுகளை, தன் இரும்பு கரங்களால் பிய்த்து எடுத்து, அதை,தன் இடது கைக்கு கேடயமாக பயன் படுத்திய அலியின் வீரத்தை கண்டு, மர்ஹப் இப்போது பதை பதைத்தான். 10 பேர் சேர்ந்து தூக்கி நிறுத்தக் கூடிய கோட்டை கத வை, அலி ஒருவரே தன்னந் தனியாக தூக்கி நிறுத்தி அதை தனது கேடயமாக பயன் படுத்திய வீரச் செயல் கண்டு வீரர்கள் மலைத்தனர்; வாளின் சுழற்ச்சி கண்டு மக்கள் பதைத்தனர்..... பின் வியந்தனர். வாளின் சுழற்சி, மர்ஹபின் தலையை இருகூறாக பிளந்தது.
வாய் பேச இடம் தராத மர்ஹப், அலியின் வாள் பேசியதால், வாய் பேச மறந்து இப்போது மூர்ச்சையானான்.
பேச்சில் வெல்ல
நாவும் ஆயுதமே!
எழுத்தில் வெல்ல
பேனாவும் ஆயுதமே!
போரில் வெல்ல
போர் வாளும் ஆயுதமே!
 
Vavar F Habibullah
https://www.facebook.com/dr.habibullah/videos/10204181154037561/ 

No comments: