Saturday, July 4, 2015

புரட்சியின் பூபாளம் !

புரட்சியின் பூபாளமே
எழுச்சியின் உத்வேகமாம்
உழைக்கும் வர்கத்தின்
ஊன்று கோலாம்
உறுதுணையாய் என்றும்
இருந்திடுமாம்


தடைகள் தகர்த்து
விடயம் தந்திடும்
மடமை நீக்கி
மனிதம் வளர்த்திடும்

சிந்திய ஒவ்வொரு துளி
வியர்வையும்
சிந்திக்காமல் சிந்தி
சிரமத்தைச் சுமந்து பாடிய
பூபாளமே

புரட்சியும் கிளர்ச்சியும்
புதுமைக்கு வித்து
புரியாத மானிடர்க்கு
பூபாளம் வெறும் மெட்டு

இயலாமை என்றென்றும்
இழிவுச்சொல்லே
முயலாமை
முன்னேறத் தடைக்கல்லே

கற்ற கல்வியும்
கடின உழைப்பும்
தன்மீது நம்பிக்கையும்
தரமான அணுகுமுறையும்
தாளாது தாங்கிவரும்
புதியதோர் புரட்சி படைக்க
பூபாளமாய் பாடிவர

பானையிலே சோறிருந்தால்
பூனைகளும் சொந்தமன்றோ
பாரினிலே பஞ்சம் வந்தால்
புரட்சியங்கே வெடிக்குமன்றோ

ஊனமான உலக வாழ்வை
மானமுள்ள மனிதம் வெறுக்கும்
நாணமது நலிந்துபோனால்
மானமதோ கப்பலேறும்

காலமெல்லாம் நலம்பெறவே
காணி நிலத்தையும் உழைப்பாக்கு
கண்ணுக்கெட்டும் தூரம்வரை
பசுமைபடைத்து புரட்ச்சியாக்கு

அதிரை மெய்சா
இந்தக் கவிதை கடந்த 22/05/2015 வெள்ளிக் கிழமை துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் நடத்திய கவிமன்றத்தில் வாசிக்கப்பட்டது. 
http://adiraimysha.blogspot.ae

No comments: