Thursday, August 13, 2015

"Ayisha is always dreaming," இது ஆசிரியமிடருந்து வந்தது, இது குற்றச்சாட்டா?? பாராட்டு என்று எடுப்பதா?

ஆயிஷா............
இரண்டாண்டுக்கு முன், பிறந்தநாளன்று புத்தகம் பரிசளித்ததிலிருந்து
( http://goo.gl/lycAAE )உங்கள் எல்லோருக்கும் இவளைத் தெரியும்.....
கடந்தமாதம், இவளின் வகுப்பாசிரியை சந்திக்கச் சென்றிருந்தேன்.
( ஒவ்வொரு மாதத்தின் இறுதி வெள்ளியன்று பிள்ளைகளின் ஆசிரியர்களை சந்திப்பதினை வழக்கமாக்கி வைத்துள்ளேன்.)..

(
பிறந்தநாள்.............
அதுவும் சிறுவர்கள் பிறந்தநாள் என்றால் முதலில் ஞாபகம் வருவது......... சாக்லெட்.... க்ரீம் கேக்,
இன்று ஆயிஷாவின் பிறந்தநாள்...........!
மாத்தி யோசி என்றது மனம்,
வகுப்பில் உள்ள அனைவருக்கும் ‘சாக்லெட்’க்கு பதில் புத்தகம் தரலாம் என்று யோசித்தேன்.... "Elementary Grammar & Punctuation" தேர்வு செய்தேன்.
இன்று காலை நண்பர்களுக்கு புத்தகம் தந்ததில் ஆயிஷாவிற்கு மகிழ்ச்சி.
படிக்கும் பழக்கத்தினை பிஞ்சுகளுக்கு விதைத்ததில் எனக்கு திருப்தி!)
"Ayisha is always dreaming," இது ஆசிரியமிடருந்து வந்தது, இது குற்றச்சாட்டா?? பாராட்டு என்று எடுப்பதா?

அடுத்து சொன்னேன், "I have ignited her mind to Dream, She is much impressed about Astronauts Sunita Williams, Neil Armstrong & Cosmonaut Yuri Gagarin .........., From the day (July 14th 2012) Sunita traveled to Space, Ayisha is virtually with her. Yes she is always thinking and asking many questions about the space life,"
இன்னும், அவளின் விருப்பத்தினை அறிந்து, அவளின் சிந்தனையைத் தூண்டக்கூடிய
Space Heroes: Amazing Astronauts
Living in Space
Astronauts
புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன் என்று சொன்னபோது, இமைக்காமல் கேட்ட ஆசிரியை,
"Hmm, All the very best, Keep it up!" என்று சொல்லிவிட்டு, "NASA is not too far" என்று புன்னகைத்துவிட்டு போனார்.
ஆயிஷாவின் அடுத்த கேள்வியோ "நம்ம நாட்டில் NASA இல்லையா ?" என்றது தான். பிறகு, ISRO பற்றியும், நம் அறிவியலாளர்கள் பற்றியும் எடுத்து சொன்னவுடன், ISRO பார்கவேண்டுமென ஆவல் அவளிடம் அதிகரித்துவிட்டது.
26-08-12 அன்று, Birla Planetarium அழைத்துச் சென்றேன், வாயிலில் நின்று வரவேற்ற, ISRO - GSLV model முன் ஓடிச் சென்று எடுத்துக்கொண்ட photo தான் இங்கு காண்கிறீர்கள்!



No comments: