Sunday, August 30, 2015

மனநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...

இன்று இருக்கும் மனநிலையில் மறுநாள் ஒருவரும் இருப்பதில்லை..

மனிதர்கள் நடை முறைகள்
அப்படித் தான்.

"கொஞ்ச முன்னால வரை
ஒழுங்கா தான் பேசினார்..

அதற்கிடையில் அவருக்கு
என்ன ஆகி விட்டது..

இப்போ ஏன் இப்படி சாடுகிறார்..

வரக்கூடியக் கோபத்திற்கு அவன் மண்டையை உடைக்கலாம் னு தோனுது .." என்றெல்லாம் சொல்வார்கள்...

பெரும்பாலும் எல்லோரும் சந்திக்கும் பொதுவானப் பிரச்சினை இது...

எல்லோருமே இப்படித் தான் இருப்பார்களா என்றால்
நிச்சயமாக கிடையாது...

ஒரு பக்குவப் பட்ட மனநிலையை அடைந்தவர்கள் இந்த மாதிரி இருக்க மாட்டார்கள்...

இப்படிப் பட்ட மனநிலை மனிதர்கள் Abnormal Person என்று அழைக்கப் படுகிறார்கள்...

இந்த மாதிரி உள்ளவர்கள் சுகர்,கொலஸ்ட்ரால்,பிளட் பிரசர்,அல்சர், இதயக் கோளாறுகள், மன அழுத்தம் போன்ற பல விதமான வியாதிகள் மூலம் பாதிக்கப் படுவதாக மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றது...

இது எதனால் ஏற்படுகிறது என்றால் பிறர் மீது அதிகாரத்தை செலுத்தி அது மதிக்கப் படாத போது அது கோபமாக மாறி இறுதியில் வெறியாக பாய்கிறது...

சில நேரங்களில் தன் இயலாமை கூட கோபமாக வெளிப் படுகிறது...

அதனால் தேவையில்லாத கோபங்களை பிறர் மீது காட்டுவதைத் தவிர்த்துக்
கொள்ள வேண்டும்...

கோபம் நெருப்பைப் போன்றது..

ஒருவர் உங்களை ஏசினால் பதிலுக்கு பதில் நீங்களும் ஏசினால் சண்டை பெரிதாகுமேயன்றி குறையாது...

கோபம் பல நல்ல உள்ளங்களை பிரித்து விடும்..

பொன்னான மனிதர்களும் கூட புண்ணாகி போவார்கள்....

முகநூலில் ஒருவர் சாதாரணமாக ஏதாவதுச் சொன்னால் கூட கோபப் பட்டு விடுகிறார்கள்...

பதிலுக்கு பதில் போட்டுத் தான் சமன் செய்கிறார்கள்...

இவர்கள் நேரில் எப்படி இருப்பார்கள் என்றுச் சொல்ல வேண்டியதில்லை...

பதிலுக்கு பதில் சொல்பவன்
அல்ல வீரன்...

கோபம் வரும் நேரத்தில் அமைதியாக இருப்பவன் தான் உண்மையிலேயே பெரிய வீரன்..

நாம் என்னவெல்லாமோ பேசுகிறோம்..செய்கிறோம். இறைவன் அனைவற்றையும் பார்க்கிறான்..

அமைதியாக இருந்து விடுகிறான்..

அவனும் பதிலுக்கு பதில் கோபம் கொண்டால் என்னாகும் ..?

‪#‎இத‬ படிச்சிட்டு நம்ம மேல கோப படாம இருந்தா சரிதான்.

(கோபத்தினால் இன்னும் ஏராளம் இருக்கிறது..சமயம் கிடைத்தால் எழுதலாம்...)
                                             Saif Saif

No comments: