Sunday, October 4, 2015

ஹாங்காங் டைம்.

குறிப்பு: ஹாங்காங் டைம்...
-----------------------------
1992 - ம் ஆண்டில்
ஹாங்காங்கில் உள்ள
திரி ஸ்டார் உணவு விடுதிக்கு (இந்தியன் ஸ்டைல்)
அஸிஸ்டெண்ட் குக்காக பணி எடுக்கச் சென்றேன்.
மலேசியாவில் இருக்கிற
என் தம்பி இதற்கு ஆவணங்கள் செய்து
வழியை சுழுவாக்கி,
நம்பிக்கை தந்து வழி அனுப்பிவைத்தான்!

'பனானா லீஃப்ஸ் கறி ஹவூஸ்' என்கிற அந்த ஹோட்டல்
சீன நடிகர் ஒருவருக்கு சொந்தமானது!
அங்கே பத்துக்கும் மேற்பட்ட
இந்தியர்கள் பணியில் இருந்தார்கள்!
பெரும்பாலும் இவர்கள் மலேசியா வாழ் தமிழர்கள்!


நான் அங்கு போன போது
அந்தத் தமிழ் நண்பர்கள்
என்னுடன் அன்பாகவே பேசினார்கள்.
அவர்களிடம் நான் ஹோட்டலை பற்றி விசாரித்தேன்...
சந்தோஷமாகவே சொன்னார்கள்.
ஹோட்டலை குறித்த மகிழ்ச்சி
அவர்களது கண்களிலும் மின்னியது.
அவர்கள் ஒரு நண்பர் புதுக் கோட்டை பக்கம்.
எனக்கு நிறைய அறிவுரைகளை சொன்னார்.
அவர் குறிப்பாக சொன்னது..

1.
"இந்தத் தீவுக்கு
திடுமென புயல் வந்து தாக்கும்.
பசிப்பிக்கின் புயலை
நீங்கள் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை!
ரோட்டில் எல்லாம் பறக்கும்...
கட்டிட ஜன்னல் கதவுகளின்
கண்ணாடிகள் எல்லாம் தூளாகி போகும்!
இரண்டு மூணு நாளைக்கு
நம்ம ஹோட்டலுக்கும் லீவு விட்டுவிடுவார்கள்!"

2.
"இங்கே (ஹாங்காங்கில்)
நம்மை மாதிரியானவர்கள்
செய்யவே கூடாத ஒண்ணு இருக்கு.
அது செத்துப் போவது!

இங்கே அடக்க இடம் கிடைக்காது.
அப்படியே தேவைப்பட்டாலும்...
சதுர இன்ஞ் கணக்கு...!
கொடுத்து மாளமுடியாத தொகை அது...!"

நான் அங்கே இருந்த ஐந்து மாதமும்
நண்பர்கள் சொன்ன எதுவும் நடக்கவில்லை!
அது..,
ரசனையான அனுபவம்தான்....
கிட்டலையே..!
 
Taj Deen

No comments: