Tuesday, November 17, 2015

இது வேருலகம்...

கள்ளம் கபடமில்லாத ஜீவன்கள்...
நம் முகம் காணாவிட்டால்....
தேடி வாடுபவை....
அன்பைத்தருபவை....
ஆதரவிற்கு ஏங்குபவை....
என்னோடு பாசம மிகக் கொண்டவை.....


சொன்னால் நம்ப மாட்டார்கள்.....
என்னோடு பேசுபவை.....
விவசாயத்தொழிலில்
மாடுகளும் காளைகளும்
இன்னும் எத்தனை நாட்களுக்கோ?

ஒரு மாட்டை பேணி வளர்க்க
நாள் ஒன்றுக்கு இரு நூறு வேண்டும்.
பாலை இறக்குமதி செய்யும் காலம்
பக்கத்தில் தெரிகிறது.....



அண்மையில் சென்னையில்
பெய்த பெருமழை
எத்தனை கால்நடைச்செல்வங்களை
இல்லாமல் ஆக்கியதோ?....

எத்தனை மாடிகள் ஏறி
அவை தம் உயிரைக் காப்பாற்றிக்
கொண்டனவோ?........

அவைகளுக்கு பசி எடுத்து
எந்த ஓட்டலில் போய் சாப்பிட்டு வந்தனவோ ?
கொசுக்கடிக்கு ....
எங்கே போய் ஆல் அவுட் கேட்டனவோ?...
எந்தப்படகிலும் அவை உயிர் தப்பி போனதைக்
காண முடியவில்லை....

விவசாயிகளை நம்பியே
பெரும்பான்மை கால்நடைகள்....

எங்கள் கூட்டுக் குடும்பத்தில்
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக
அவைகளும் ஓர் அங்கம....
எங்கள் பண்ணையில்
அவைகளைக் கண்டு வருவதிலே
எனக்கொரு சுகம் தான்....
அவைகளும் எனக்கு நட்புகள் தாம்.

பெரும்பான்மை இறைத்தூதர்கள்
மாடோட்டிகளும்
ஆடோட்டிகளும் தான்

புரிந்து கொள்ள மறுப்போர்
இதையும் ஏற்றுக் கொள்வதில்லை.....
 Lks Meeran Mohideen

No comments: