Sunday, December 13, 2015

அத்தா...

சொச்ச வரிகளில் எழுதமுடியா
கணம் நிறைந்த கனமான புத்தகம்;
தூரத்திலிருந்து ஓர மன கண்ணில்
காதலிக்கும் அற்புதம்;

அம்மாக்களை எழுதித்தீர்த்த
மை என்றாலும் சிரிப்பாய்;
அம்மாதான் எல்லாம் என்றாலும்
பற்கள் தெரிய ஜொலிப்பாய்;

உங்களுக்குப் பயந்துக்கொண்டு
அம்மாவின் முந்தாணையில்
ஒளிந்தக்கொண்ட சிறுவன் நான்;
அவனை அடிக்காதே என்று
அம்மாவிற்கே அறிவுரை சொல்லும்
வில்லன் பட்டத்துடன் திரியும் கதாநாயகன்;

அதட்டலோடு அன்பைக்கொடுக்கும் அருவி;
அன்பென்றால் அழுதுவிடும் மழலை;
பாசத்திற்காக ஏங்கும் குழந்தை;

நிச்சயம் நிரப்பமுடியா தியாகத்தின்
பக்கங்கள் நிறைந்த புத்தகத்தின் எழுத்து;
இன்னும் காலரை..
தூக்கிக்கொண்டே சொல்லலாம்
என் அத்தாதான் எனக்குத் தலைப்பு!
 Yasar Arafat

No comments: