Tuesday, December 8, 2015

முக வாசம்

இப்போது,
அரசு நிர்வாகம், காணொளிக் காட்சியாகி விட்டது.
அரசியல் அரங்கம், ஒலி - ஒளி கண்காட்சி சாலையாகி விட்டது.

தலைவர்கள் - நல்ல நடிகர்களாக,
நடிகர்கள் - வல்ல தலைவர்களாக,
அரங்கத்தில் விளையாடுகிறார்கள்.

மழை, புயல், காற்று, பெருவெள்ளம்,
தமிழகம் - உருக்குலைந்து கிடக்கிறது.

மக்களே, மக்களை பேரழிவிலிருந்து
காப்பாற்றும் - உயர் பண்பின் சமரசம்.

ஜாதி, மத, இன பேதங்களுக்கு அப்பால்
உறைந்து கிடக்கும் மனித நேயம்..
அறிமுகம் இல்லா, மனித முகங்களால்
மலர்ந்து, வளர்ந்து, பரந்து, விரிந்து செல்கிறது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் முகங்களை,
தாய் பாசத்தோடு அரவணைத்து கரை சேர்க்கின்ற நேச முகங்கள்.

தண்ணீர் பிரதேசம், பாச முகங்கள் ஒளியில்,
பிரகாசமாய் ஜொலிக்கிறது.

மக்களை காக்க, அரசுகள் இனி தேவை இல்லை.
அதிகாரம் தேவை இல்லை.
அமைச்சர்கள் தேவை இல்லை.
மக்களை வஞ்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தேவை இல்லை.
இவர்களின் துணை இன்றியே தமிழகம் தன்னை தற்காத்து கொள்ளும் தகுதியை பெற்றுவிட்டது.

இனி, ஊடகங்களை மூடுங்கள்.
மீடியாக்களை புதையுங்கள்.
காசுக்காக, சமூகத்தை விற்கும் புது யுக
சமூக ஆர்வலர்களை புறந்தள்ளுங்கள்.
பொது மக்கள் கருத்துக்கு இடம் தராத
அரசியல் ஆரூடங்களை புறக்கணியுங்கள்.
உங்கள் உண்மைக் குரலை ஓங்கி ஒலிக்க செய்ய, உங்கள் சமூக் வலைத் தளங்களுக்கு...
உயிர் கொடுங்கள். அதன் மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த துணை புரியுங்கள்.

Vavar F Habibullah

No comments: