Thursday, February 25, 2016

வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம்

“ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்” என்பான் கவியரசு கண்ணதாசன். புதிய ஆண்டு பிறப்பதை கொண்டாடச் சொல்லும் மனது , வயதொன்று கூடுவதை ஏனோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.
“Age is an issue of mind over matter. If you don't mind, it doesn't matter” என்கிறான் மார்க் ட்வெய்ன்.
வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் வயதாகி விட்டது என்ற எண்ணத்தை நம்மால் தடுக்க முடியும். நம்மை நாமே சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம். அதைத்தான் நான் செய்துக் கொண்டிருக்கிறேன்.

“கற்பதை எவனொருவன் நிறுத்திக் கொள்கிறானோ அவனுக்கு வயது தானாகவே கூடி விடுகிறது. எவனொருவன் கற்றுக்கொள்வதை நிறுத்தவில்லையோ அவன் இளமையாகவே இருக்கிறான். வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால் உள்ளத்தை இளமையாக வைத்துக் கொள்வதுதான்” என்று என்னைப் போன்றவர்களுக்கு அன்புடன் அறிவுறுத்துகிறார் ஹென்றி போர்ட்.
ஆண்களிடம் சம்பளத்தொகையையும், பெண்களிடம் வயதையும் கேட்கக்கூடாது என்கிறார்கள். இது என்ன அநியாயம்? இது ஆண் இனத்திற்கே இழைக்கப்படும் மாபெரும் அநீதி அல்லவா? இந்த பழமொழியை திருத்தி எழுதினால் என்ன என்று தோன்றுகிறது.
நான் என் வயதை கடந்துப்போன வசந்த நினைவுகளை வைத்தே கணக்கிடுகின்றேனே தவிர உருண்டு போன வருடங்களை வைத்து அல்ல.
இது லீப் வருடம்.
நான் பிப்ரவரி 26-க்கு பதிலாக பிப்ரவரி 29-ஆம் தேதி பிறந்திருப்பேனேயானால் நான்கு வருடத்திற்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடியிருப்பேனே !!!


அப்துல் கையூம்

No comments: