Friday, February 26, 2016

புல்லரிக்குது போங்கப்பா

Kathir Vel

அரசியல் சாசனத்தில் ஆர்டிகிள் 19 என்ன சொல்லுது?
"மனசுல உள்ளதை ஓப்பனா சொல்ல ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும்
சுதந்திரம் உண்டு".
இந்தியா ஜனநாயக நாடு. இங்கே யாரும் யாருக்கும் எஜமானும் இல்லை, அடிமையும் இல்லை.
யாரும் என்ன வேணா பேசலாம்.
முட்டாள்தனமா பேசலாம்.
மடத்தனமா உளறலாம்.
அர்த்தமே இல்லாம பேத்தலாம்.
எவனுக்குமே புரியாத மாதிரி கதறலாம்.
மொத்தமும் தப்பாவே இருக்கலாம்.
ஆனா...
நல்லா கேளு. ஆனா, அப்படில்லாம் பேச அவனுக்கு அல்லது அவளுக்கு உரிமை இருக்கு. அதுல எவனாலும் கை வைக்க முடியாது, ஆமா.
நீ அவனை என்ன வேணா சொல்லிக்கோ.
நாய்னு சொல்றியா.
அப்படியே இருந்துட்டு போட்டும்.
ஆனா அதுக்கு இஷ்டப்படி குரைக்கிற உரிமை இருக்கு.
அத மறந்துடாத.
நீ அரசாங்கம்.

அவ்ளோ பெரிய அதிகார அமைப்பு.
நாய் குரைச்சா உனக்கு என்ன வந்துது?
நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு.
என்னது, அவன் தேச விரோதியா?
அத நீ எப்படி சொல்ல முடியும்?
அவன் இந்த நாட்டுக்கு எதிரா கெட்ட நோக்கத்தோட அப்படி பேசினான்னு உன்னால நிரூபிக்க முடியுமா?
அவன் அப்படி பேசினதால கலவரம் வெடிக்கும்னு உன்னால சொல்ல முடியுமா?
நாட்டுக்கு எதிரா கோஷம் போட்டா கலவரம் வெடிக்குமா?
நம்ம காஷ்மீர்ல தினம் தினம் கோஷம் போட்டு ஊர்வலம் போறாங்க, அங்க யாரையும் கைது பண்ணலையே, ஏன்?
ஒருத்தன் கோஷம் போட்டா அரெஸ்ட் பண்ணுவீங்க.
கும்பலா கோஷம் போட்டா காத பொத்திப்பீங்களா?
எல்லாரும் மனுஷங்க. எல்லாருக்கும் யார் மேலயாவது கோபம் வரும். திட்டுவாங்க. திட்டிட்டு போகட்டும், விடேன். அதனால் நீ என்ன அழிஞ்சா போயிருவ?
இது பெரிய நாடு. உலகத்துல மிகப்பெரிய ஜனநாயகம். ஏதாவது ஒரு மாநிலத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தியா ஒழிகனு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க. அது உண்மைல நாட்டுக்கு எதிரான கோபம் இல்ல.
நாட்டை ஆட்சி செய்ற அரசாங்கத்துக்கு எதிரான கோபமா இருக்கும்.
நீ கண்டுக்காம இருந்தா வேற யாரும் கண்டுக்க மாட்டாங்க. அவன் கோஷம் போட்டு முடிச்சு வீட்டுக்கு போயி நிம்மதியா தூங்குவான். விட்டுடேன்,
உனக்கு என்ன நஷ்டம்?
இது 21ஆம் நூற்றாண்டு. நம்ம நாடு ரொம்ப பெரிசு. நிறைய பாத்துட்டோம். இன்னும் பாக்க போறோம். அப்ப நமக்கு பெரிய மனசு இருக்கணும். மெச்சூரிடி வேணும். சின்ன சின்ன விஷயங்கள்ல கவனத்தை விட்டோம்னா பெரிய விஷயங்கள்ல கோட்டை விட்ருவோம்.
பாரு, பேசாம விட்ருந்தீன்னா விஷயம் ஒரு கேம்பஸ்குள்ளயே முடிஞ்சிருக்கும்.
இன்னிக்கு பாரு உலகம் பூராவும் ஜேஎன்யு பத்தி பேசிகிட்டு இருக்கு.
ஏதோ சில பசங்க அதுவும் ஸ்டூடன்ஸ் கோபத்துல கோஷம் போட்டா நாட்டுக்கே ஆபத்தா?
உடனே இந்த நாடு என்ன சிதறியாடா போயிரும்?
அவ்வளவு சீப்பாவா நினைச்சுகிட்டு இருக்கீங்க நம்ம நாட்ட?
இதுதான் இந்திய மக்கள நீங்க புரிஞ்சு வச்சிருக்க லட்சணமா?
போங்கப்பா, போய் வேலைய பாருங்க.
(சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி பைசனுதீன் டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் 24 நியூஸ் ஆகியவற்றுக்கு அளித்த பேட்டிகளில் இருந்து. தேச
துரோக குற்றம் என்றால் என்ன என்று 1995ல் ஏ.எஸ்.ஆனந்துடன் சேர்ந்து இவர் வழங்கிய தீர்ப்பு நீதித்துறைக்கு ஒரு பாடம் போன்றது).

No comments: