Saturday, April 9, 2016

வெளிநாட்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஊருக்கு வந்தாகி விட்டது...

அஹமது கண்ணு வெளிநாட்டு வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஊருக்கு வந்தாகி விட்டது...
ஆரம்பத்தில் அவருக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை..நாளாக நாளாக அவருக்கு இந்த வாழ்க்கை போரடித்தது..
வேலை பார்த்த இடத்தில் எல்லோரையும் அதட்டியும்,ஆணவமாய் கத்தியும் வேலை பார்த்த அவருக்கு வீட்டில் அமைதியாக இருக்க பிடிக்கவில்லை...
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் எல்லோரிடமும் தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார்..

இவருடைய திட்டுக்களை,நையாண்டி பேச்சுக்களை மனைவியும்,பிள்ளைகளும் எவ்வளவோ பொறுத்தும்,வெறுத்தும் வந்தனர் ..
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இவருடைய அதிகாரம் அங்கு எடுபடவில்லை..
வீட்டில் இவர் பேச்சை யாரும் மதிப்பதேயில்லை..
வீட்டில் இருந்தால் எப்போதும் சண்டை தான்..
சும்மா எல்லோரையும் அதட்டி பழகிய அவரால் மேலும் சும்மா வீட்டில் இருக்க முடியவில்லை...
என்னச் செய்யலாம் என யோசித்தார் அஹமது கண்ணு..
வீட்டை விட்டு வெளியில் வந்தார்..
பெரிய முதலீட்டில் ஒரு வியாபாரம் ஆரம்பித்தார்..
நல்ல அருமையான முறையில் வியாபாரம் நடந்தது..
ஆனாலும்
அகமது கண்ணுக்கு பெருமை,ஆணவ புத்தி கொஞ்சமும் குறையவில்லை..
கடையில் வேலை பார்த்த பையனிடமும், வரும் வாடிக்கையாளர்களிடமும் தன் முன் கோபத்தால் எப்போதும் போல் எரிந்து எரிந்து விழுந்தார்..
வருவோர் போவோர் இடமெல்லாம் தன் வாய் சவடாலை போட ஆரம்பித்தார்..
"நான் எப்படி பட்ட ஆளு தெரியுமா..என் பரம்பரை தெரியுமா..நான்
படிச்ச படிப்பு தெரியுமா..என்னைபோல எவனுக்கு அறிவு இருக்கு..நான்லாம் அந்த காலத்தில.." என்று பழைய புராணங்களை எடுத்து விட ஆரம்பித்தார்..
இதை பார்த்த பலரும் இவர் கடைக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள்..இவரை பார்த்தாலே தெறித்து ஓட ஆரம்பித்தார்கள்...
அது போக பக்கத்தில் உள்ளவர்களையும் இவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்..
அதனால் இவருடைய வெத்து பேச்சுக்கு பயந்து அந்த ஏரியாவில் உள்ள பலர் வீடுகளை காலி செய்து விட்டார்கள்..
"பிறருடைய உணர்வுகளை மதித்து பேச தெரியாதவர்களை யார் தான் மதிப்பார்கள்.."
இப்படி பலர் அதிரடியாக வீடுகளை காலி செய்வதை பார்த்த இவரது மனைவியும்,பிள்ளைகளும் தீவிரமாக யோசனை செய்ய ஆரம்பித்தார்கள்..
அப்பாவால் ஒரு ஏரியாவே
காலி ஆகி விடக் கூடாது..பிறகு தாங்கள் மட்டும் தான் அந்த ஏரியாவில் இருக்க வேண்டும் என்பதில் மகன் ரெம்ப மன சங்கடத்தில் இருந்தார்..
இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை மகனுக்கு...
அதனால் மறுபடியும் இவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவுச் செய்தார்கள்..
பழைய கம்பெனி M.D க்கு மெயில் ஒன்றை அனுப்பினார் மகன்..
"எனது தந்தை உங்களிடம் பல வருடங்களாக வேலை பார்த்தவர்..அவருடைய அந்த அனுபவங்கள் உங்களுக்கு மீண்டும் உபயோகப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்..அதனால் என் தந்தையை மீண்டும் தாங்கள் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்..முக்கியமான விஷயம் தாங்கள் சம்பளம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை...மூன்று வருடத்திற்கொருமுறை நீங்கள் விருப்பப் பட்டால் விடுமுறை கொடுத்தால் போதும் "
என்பதாக அந்த மெயில் அமைந்திருந்தது...
மெயில் அனுப்பி ஓரு வாரம் ஆகியும் M.D இடமிருந்து எந்த தகவலும் வரவில்லை..
இப்படி தன்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வீட்டில் திட்டம் தீட்டப் பட்டிருப்பது அகமது கண்ணுக்கு துளி கூட தெரியாது...
அவர் எப்போதும் போல தன் தம்பட்டங்களை வீதியெங்கும் பீத்திக் கொண்டிருந்தார்...
பொறுமையிழந்து போன மகன் மீண்டும் M.D க்கு ஒரு ரிமென்டர் மெயில் அனுப்பினார்...
மறுநாள் அந்த கம்பெனியிலிருந்து ஒரு மெயில் வந்திருந்தது...
அதில் கீழ்கண்டவாறு வாசகங்கள் இருந்தது...
"தாங்கள் அனுப்பிய மெயில் பார்த்தோம்..சந்தோஷம்..
தங்கள் தந்தையை எங்கள் நிறுவனத்தில் சேர்ப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
ஆனால் முன்பு இவருடன் வேலை பார்த்த பலரும் இப்போது இங்கு
வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள்...
அதுவும் சம்பளமில்லாமல் அவர்கள் அனைவரும் இவரின் கீழ் வேலை பார்த்தவர்கள் தான்...
இப்போது இவருக்கு வேலை கொடுப்பதென்றால் அவர்களை விட குறைந்த பதவி தான் இவருக்கு கொடுக்க முடியும்..
அப்படி கொடுக்கின்ற பட்சத்தில் இவரின் கீழ் வேலை பார்த்தவர்கள் இவரை தவறாக பயன் படுத்திக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கிறது..அதை கம்பெனி நிர்வாகம் விரும்பவில்லை..
மன்னிக்கவும்..
மேலும் உங்களை பற்றி தெரிந்திருக்கிறோம்..
தங்களுக்கு வேலை தர நாங்கள் தயாராக இருக்கிறோம்
சம்பளத்தோடு .
உங்கள் பயோடேட்டாவை உடனே அனுப்பித் தாருங்கள்..ஆவணச் செய்கிறோம்..இது பற்றிய விவாதித்ததில் உடன் பதில் அனுப்ப முடியாமல் ஏற்பட்ட
கால தாமத்திற்கு வருந்துகிறோம்...
உங்கள் அன்புக்கு நன்றி..."
‪#‎நீதி‬: வேலை பார்க்கும் இடங்களிலும்,இருக்கும் இடங்களிலும் தலைகால் புரியாமல் ஆடினால் பின்னர் அனுபவிக்க வேண்டி வரும்..
Saif Saif

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கதை போலோர் உண்மைச் சம்பவம்!!!