Friday, April 29, 2016

ராஜ்ஜியம் ஆளும் கலை

Vavar F Habibullah
 
ஒரு நாட்டை எப்படி ஆட்சி செய்வது. ஒரு சிறந்த ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும். அவன் தகுதிகளை வளர்த்துக் கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற விதிமுறைகளை வகுத்து அதை அரசனுக்கு பயிற்றுவிக்க உலக நாடுகளில் அமைந்த ஆலோசனைக் குழுக்கள் ஏராளம்.

அரிஸ்டாடிலை தனது ஆசிரியராக அமர்த்தி கொண்டான் மகா அலெக்சாண்டர். அரிஸ்டாடில் பிளாட்டோவிடம் கல்வி கற்றான். பிளாட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸ். ஆளும் கலைகளை அன்றைய கிரேக்க உலகுக்கு கற்று தந்தவர்கள் இந்த மேதைகள் தான்.சைனாவுக்கு ஒரு கான்பூசியஸ் என்றால் இந்தியாவுக்கு ஒரு சாணக்கியன் இருந்தான்.
மோசஸ் என்ற மூசாவும் ஒரு போர்ப்படை தளபதி தான . முகமது நபியும் ஒரு போர்ப்படை தளபதி தான்.இவர்களின் போர் நுணுக்கங்களே அவர்கள் கால வெற்றிக்கு வழி வகு த்தன.

அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று 'பிரின்ஸ்' அதாவது இளவரசன் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி வைத்து விட்டு மறைந்து போனவன் நிகோலஸ் மார் கியவல்லி. இத்தாலியை சார்ந்த இவன் இறந்த பின்னரே இந்த புத்தகம் 15 ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியாகி உலக நாடுகளின் தலைவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது. சிறிய புத்தகம் ஆயினும் இவனது கருத்துக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் விரும்பி படிக்கப்பட்டது.

உலக புரட்சிகளுக்கெல்லாம் வித்திட்டதே இவன் எழுதிய இந்த சிறிய கையேடுதான்.
ஐரோப்பிய புரட்சிகளுக்கும், ஆங்கில புரட்சிக்கும், அமெரிக்க புரட்சிக்கும் பிரெஞ்சு புரட்சிக்கும், ரஷிய புரட்சி வெடிக்கவும் காரணமாக அமைந்தது இவன் எழுதிய இந்த சிறு நூல் தான்.

இந்த புத்தகத்தை பல நூறு முறை படித்ததாக மாவீரன் நெப்போலியன் குறிப்பிடுகிறான். தன் தலையணையின் கீழ் வைத்து இந்த புத்தகத்தை பாதுகாத்ததாக அவன் குறிப்பிடுகிறான். அடால்ப் ஹிட்லரும் படித்தான், முசோலினியும் படித்தான்.சர்ச்சிலும் படித்தான். பெஞ்சமின் பிராங்க்ளினும் படித்தான். ஜபர்செனும் படித்தான்.ஏன் ரஷியாவின் லெனினும், ஸ்டாலினும் படித்தனர்.துருக்கியின் அடாடர்க்கும் படித்தான். அரபகத்தின் அரசர்களும், இளவரசர்களும் இதை படித்துணர போ ட்டியிட்டனர்.

16 ம் நூற்றாண்டுக்கு பிறகு உலகை ஆண்ட அத்தனை ஆட்சியாளர்களையும் மார்கியவல்லியின் இந்த சிறிய புத்தகம் கட்டி போட்டது. இதில் ஒழிந்து கிடக்கும் பேருண் மைகள் கண்டு மன்னர்கள் வியந்து போயினர் உலக ஆட்சியாளர்களின் அரசியல் மதிநுட்ப பைபிளாகவே இது விளங்கியது.

இந்திய அரசியல் தலைவர்களை இந்த புத்தகம் ஈர்த்ததா என்பது தெரியவில்லை.ஆனால் இந்த புத்தகத்தை படிக்காமலே நம் தலைவர் கள் நிகழ்த்தும் அபார அரசியல் சாதனைகள் மார்கிய வல்லி உயிரோடு இருந்திருந்தால் அவரையே வெட்கி தலைகுனிய வைத்திருக்கும்.

'ஒரு ஆட்சியாளன் மக்கள் முன் கனிவோடு இருப்பது நல்லதா அல்லது மக்களை மிரட்டி பயமுறுத்தி பணிய வைப்பது நல்லதா?'

பயமுறுத்தி பணிய வைத்த பின் மக்கள் முன் கருணை காட்டுவது போல் நடிக்க வேண்டும்.

'புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்பவன் செய்ய வேண்டிய முதல் பணி என்ன.?'

பழைய ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் அத்தனை பேரையும் தேடி கண்டு பிடி த்து அவர்களை முற்றிலுமாக அழித்து ஒழிக் க வேண்டும்.

'ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு இளவரசன் என்ன செய்ய வேண்டும்?'

தடையாக இருப்போர் யாராக இருந்தாலும் அவர்களை வேறோடு அழித்து ஒழிக்க வேண் டும்.சொந்தமானாலும், பந்தமானாலும் இந்த விதி பொறுந்தும்.

'மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது எப்படி?'

ஆட்சியின் துவக்க காலத்தில் எல்லா கெட்ட காரியங்களையும் ஒட்டு மொத்தமாக செய்து முடித்து விட வேண்டும் . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல காரியங்களை நிறை வேற்ற வேண்டும். மக்களுக்கு மறதி அதிகம். இதனால் பழைய விஷயங்களை மறந்து விடுவார்கள். சிறிது நல்லது செய்தால் புகழ்வார்கள்.

மார்கியவல்லி தனது புத்தகத்தில் ஆட்சியா ளர்களுக்கு வழங்கும் பொன்னான அறிவுரைகளின் ஒரு பகுதி தான் மேல் கூறப்பட்ட கேள்விகளும் பதில்களும்.

நமது ஆட்சியாளர்களிடம் இருந்து மார்கிய வல்லி கற்றுக் கொள்ள இன்னும் ஏராளமான நவீன யுக்திகள் இங்கே மலிவான விலையில் விற்பனைக்காக ஏராளம் குவித்து வைக் கப்பட்டுள்ளன
  Vavar F Habibullah

No comments: