Tuesday, May 10, 2016

இந்த வலிகளை உணரும் ஒவ்வொரு மனிதர்களும் ....


Saif Saif
காலையில் 10 மணிக்கு மனைவியை லேபர் ரூம் கொண்டு போனாங்க..
வெளியை வாசல்ல நின்னு என்னாச்சு என்னாச்சு என்று பரிதவிப்போடு உள்ளிருந்து வெளியே வருவோரிடமெல்லாம் கேட்டு கேட்டு பொறுமை இழந்து விட்டது மனசு...
மதியம் வந்தது..மெல்ல மெல்ல மாலை வந்தது..இரவும் வந்தது..
வெளியை பரிதவிப்போடு நின்ற கணவனால் என்ன செய்ய முடியும்..
இப்போ டெலிவரி ஆகி விடும் என்று சொல்லி சொல்லியே இரவு ஆகி விட்டது...
இரவு 9 மணி அளவில் மனைவியை வெளியில் அழைத்து வந்தார்கள்..
இரு நர்ஸ்கள் கைதாங்கலாக அழுது அழுது கண்கள் வீங்கி விட்டது..முகமும் வீங்கி விட்டது..
பார்த்த கணவனுக்கு கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை..
இந்த நிலையில் இனியும் வலி தாங்க கூடிய நிலையில் அவள் இல்லை என்பதை புரிந்து கொண்ட கணவன் டாக்டரிடம் ஆப்ரேஷன் செய்யுங்கள் என சொன்ன போது..
"இப்படி ஒரு
கணவனா இப்படி தான் இருக்கும்..பேசாமல் போங்க ஸார் எங்களுக்குத் தெரியும்" என டாக்டர் மறுத்தார்..

அவர்களுக்கு இது பழகி போன ஒன்று..
ஆனால் கணவனோ பிடிவாதமாக நின்ற பிறகு டாக்டர் ஆப்ரேஷனுக்கு சம்மதித்தார்..
அப்படி ஒரு நாள் முழுவதும் வேதனையில் கிடந்த அந்த மனைவியை அந்த நர்ஸ் வெளியில் அழைத்து வராமல் இருந்திருந்தால் அவளின் இந்த நிலை கணவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை..
பசிக்கிறது என்று சொன்னதால் அந்த நர்ஸ் வெளியே அழைத்து வந்தார்..
அதனால் நர்ஸை கூட டாக்டர் கடிந்து கொண்டார்..
10.30 மணி அளவில் ஆப்ரேஷன் செய்து குழந்தை வந்த பிறகு குழந்தையை பார்த்தாலும் அதன் பிறகு மயங்கிய நிலையில் வலிகளை எல்லாம் தாங்கி 10 மாதம் சுமந்து பெற்ற அந்த தாயை பார்த்த போது மனதில் தோன்றிய ஆயிரம்
வலிகள் காணமல் போனது..கணவனுக்கு..
"அழுது அழுது அவர் பிள்ளையை அவர் தான் பெற வேண்டும் எனச் சொல்வார்கள்.."
அப்படி அழும் போது அருகில் கணவனும் இருக்க வேண்டும்..அந்த வலியை அவனும் உணர வேண்டும்..
தாயின் வலிகளை பிள்ளைகளும் உணர்ந்து நடக்க வேண்டும்..
இந்த வலிகளை உணரும் ஒவ்வொரு மனிதர்களும்
தன் மனைவியை மதிப்பார்கள்..தன் தாயை மதிப்பார்கள்... பெண்களை மதிப்பார்கள்...
‪#‎வலிகள்‬ தெரிந்தும் பிள்ளைகளை
சுமக்கும் அன்னையர் ஒவ்வொருவருக்கும் என் இதய வாழ்த்துக்கள்..

Saif Saif

No comments: