Wednesday, June 1, 2016

மனம் ஒரு குழந்தை

ஆட்டிவைக்கும்
அழுது புலம்பும்
வாட்டிவதைத்துன்னை
தன்வழிக்கே வரவழைக்கும்
வேண்டியவைக் கிடைப்பதற்காய்
விழிக்குள்ளும் விரல் நுழைக்கும்
வேண்டாதார் மனம் புகுந்து
வெட்டிக்கதையளக்கும்
ஆத்திரம் கொள்ளவைக்கும்
பிறர் அன்பினால் துள்ளவைக்கும்

காத்திருப்புக் கைநழுவினால்
கதியற்றுத் திரியவைக்கும்
மனமென்பது நீ கண்டறியா
மாசற்றக் கைக்குழந்தை
மௌனமெனும் கையேந்தி
மண்டியிட்டு தோளிலிடு
கண்டதையெல்லாம் கேட்டலையும்
கருத்தறியும் வரைக ்காத்திரு
உண்டதை வாந்தியெடுத்து
உன்தோள்களில் துவளும் வரை
கொண்டதே கோலமெனும் அதன்
கொள்கைக்கு செவிசாய்த்திடு
அடிமையென்று எண்ணாதே
அன்பினால் பணியவை
அடக்கியாள நீ நினைத்தால்
அடக்கியுனைப் பழிதீர்க்கும்
மனமென்பது நீ கண்டறியா
மாசற்றக் கைக்குழந்தை
மௌனமெனும் கையேந்தி
மண்டியிட்டுத் தோளிலிடு
நீ கண்ட கனவனைத்தையும்
கரிசனமாய்க் கேட்கவை
உன் போன்ற தாய்கிடைத்த
உள்ளப் பூரிப்பினாலே
கண்போல உனைக்காக்கும்
கருத்தோடுன் சொல்கேட்கும்
முன் ஜென்மக்குறையதைதேடி
முறைப்படிக்கணக்கு தீர்த்து
மூவுலக வாழ்வறியும்
முகத்திரியை ஏற்றி வைத்து
முக்திபெறும் கதியடையும்
சக்திதனில் ஏற்றி வைக்கும்
மனமென்பது நீ கண்டறியா
மாசற்றக் கைக்குழந்தை ...!

தமிழ் பிரியன் நசீர்

No comments: