Saturday, June 25, 2016

மரணத்திற்கு அப்பால்... (strictly for the people who believe in afterlife)


Vavar F Habibullah

மனித இனம் அனைத்தும் ஒரே ஆத்மாவில் இருந்து படைக்கப்பட்டதாக திருகுர்ஆன் அறி விக்கறது. அது போலவே ஒவ்வொரு ஆத்மா வும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும் என்றும் சான்று பகர்கிறது. அப்படியென்றால் மரணத்தை சுவைப்பது யார்? மனிதனா அல்லது அவன் ஆத்மாவா!
மரணம் மனித உடலை அழித்து விடும். உடல் அழிந்தால் மனமும் அழிந்து விடும். ஆனால் ஆத்மா என்றும் அழிவதில்லை. ஆத்மா நேரடியாக இறைவனை சென்றடைகிறது என்பது பெரும்பாலான மதங்களின் கருத்து.
அதனாலேயே இறந்த மனிதனின் ஆத்மா சாந்தியடையவும், இறைவன் திருவடி நிழலில் இழைப்பாறவும் வேண்டி பிற மனிதர்களால் இன்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.சில மதங்கள் இதை ஆமோதிக் கின்றன. சில மதங்கள் வேறு படுகின்றன.

கடவுளை அங்கீகரிக்காத புத்த மதமும், ஜைன மதமும் ஆத்மாவை பற்றி அதிகம் பேசுகின்றன. யூத மதம், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் ஆத்மாவின் அழிவற்ற தன்மை பற்றி விலாவாரியாக விளக்கங்கள் தருகின்றன.
ரோமன் கத்தோலிக்க சபை ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதை அங்கீகரிக் கிறது.ஆனால் புரடென்சண்ட்(protestants) பிரிவினர் இதை ஆதரிப்பதில்லை. இறந்த மனிதனின் நற்செயல்களே அவன் ஆத்மா தூய்மைப்பட உதவும் என்பதும், பிற மனிதர்களின் பிரார்த்தனைகள் தேவையற்றது என்பதும் இவர்களின் கருத்தாகும்.
இறந்து போன மனிதனின் கருமங்கள் அனை த்தும் சீல் வைக்கப்படுவதால் அவன் ஆத்மா விற்காக மற்றவர்கள் பிரார்த்தனை செய்வது தேவையற்றது என்பது இஸ்லாத்திலும் ஒரு பிரிவினர் கொள்கையாகும்.தவறு செய்த ஆத்மாவிற்காக மற்றவர்கள் பிரார்த்திப்பது தவறு என்பது இவர்கள் எடுத்து வைக்கும் வாதம்.
நூஹ் நபி தன் மகனுக்காக பிரார்த்தனை செய்ததை, லூத் நபி தன் மனைவிக்காக பிரார்த்தித்ததை, இப்றாஹிம் நபி தன் தந்தைக்காக பிராத்தனை செய்ததையே இறைவன் அங்கீகரிக்காமல் தடுத்ததை இவர் கள் காரணம் காட்டுகிறார்கள்.
இறந்தவர்களின் ஆத்மா உயர்நிலை பெற வேண்டி திருமறை ஓதுவதையும், இறந்தவர்களுக்காக பிறர் துஆ செய்வதையும் உம்ரா மற்றும் ஹஜ் போன்றவற்றை அவர் களுக்காக பிறர் செய்வதையும் இவர்கள் எதிர்க்கிறார்கள். நற்கருமங்கள் எதையும் வாழும்போது செய்யாத மனிதர்களுக்காக மற்றவர்கள் கையேந்தி பிரார்த்திப்பதை இறைவன் விரும்புவதில்லை, மேலும் ஹஜ் போன்ற கடமைகளை செய்யாமல் இறந்து போனால் கூட - பிறா் தனக்காக, தான் இறந்த பிறகு இதை நிறைவேற்றினால், தன் பாவங்கள் தொலைந்து போகும் என்ற நம்பிக்கையை உயிர் வாழ்பவர் மனதில் ஏற்படுத்தும்; இதன் மூலம் கடமைகளிலிருந்து நழுவுவதற்கும் வழிவகுக்கும் - என்பது இவர்கள் வாதம்.
இந்த வாதங்கள் அத்தனையும் தவறு என்று சொல்பவர்களும், இறந்தவர்களுக்காக பிரார் த்தனை செய்யலாம் என்று சொல்பவர்களும் அதிகமாகவே உள்ளனர்.
இறந்த பின்னர் ஆத்மாவின் நிலைஎன்ன?
அழிந்து போன உடலை விட்டு அகன்ற ஆத்மா புதிய உடலை பெற வேண்டி காத்திருக்கும் காலம் எதுவரை? அதுவரை அதன் இருப்பிடம் எது? சொர்க்கமா அல்லது நரகமா!
கெட்ட பல செயல்களை உலகில் வாழும் போது செய்து விட்டு இறந்துபோனவன் - சொர்க்கம் புக வேண்டும் என்று, அவன் குணத்தை அறிந்தவர்கள் பிரார்த்தனை செய்தால் அதை இறைவன் அங்கீகரிப்பானா அல்லது நிராகரிப்பானா? சற்று விசித்திரமான கேள்வி தான் என்றாலும் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை.
இறந்து போனவன், நல்ல ஒரு மகனை பெற்று வளர்த்து அவன், தந்தைக்காக பிரார்த்தித்தால் அந்த பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும்.
மரணித்தவன் தர்மத்திற்காக ஒரு நிதியை ஒதுக்கி அதன் மூலம் பிறருக்கு உதவி புரிந்தால் இந்த தர்மம் அவனை காக்கும்.
நல்ல அறிவு பூர்வமான நூல்களை எழுதி அதன் மூலம் நல்ல வாழ்வியல் கருத்துக்களை, பிறர் மனதில் விதைக்க துணை புரிந்தால் அது நன்மை பயக்கும்.
ஓ ஆத்மாவே!
ஆனந்தம் பெறுக.
படைத்த இறையிடம்
திரும்பி வருக.
சந்தோஷத்தோடு வருக,
மகிழ்ச்சி ததும்ப வருக.
என் நல்லடியார் வரிசையில் அமர்க,
எனது சுவர்க்கத்தில் நுழைக.
மனித ஆத்மாவை பார்த்து நேரிடையாக இறைவன் பேசும் இந்த வசனம் என் சிந்தையை கவர்ந்த திருமறை வசனமாகும்.
Vavar F Habibullah

No comments: