Monday, July 11, 2016

முத்து குளிக்கிறோமா, மூச்சை அடக்குகிறோமா?


Raheemullah Mohamed Vavar 
to
 

to எண்ணமும் எழுத்தும்......
கடலின் அடியில் கிடந்து மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவன் மூங்கில் போல் ஏதாவது ஒன்று தென்படுகிறதா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறான் என்கிற உண்மையை சொல்ல வந்தால் அதில் நகைப்பிற்கிடமேது. தண்ணீருக்குள் நடக்கும் காட்சிகளும் அவன் படும் மரண வேதனையும் நம் கண்களுக்கு தெரியாமல் போவதால், கையில் அமர்ந்த கொசுவை தட்டி விட்டு வேலையில்லா நம் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது போல..நாம் கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

வேகமான படகில் இருந்து தவறி விழுந்தவனை முட்டி முட்டியே பாதாளம் வரை கொண்டு சென்ற முரட்டு சுறா ஒன்று தரை தட்டிய போது அதற்கான வேளை வந்ததென்று அவன் ஒரு காலை கடித்து முழுவதுமாய் விழுங்கும் ஆவேச நேரத்தில், காலை வாயில் இருந்து எடுப்பது பிறகாகட்டும், முதலில் உயிரோடிருக்க சுவாசிக்க வேண்டுமே என்கிற பதைபதைப்பில் வளர்ந்து நிற்கும் பாசிகளில் மூங்கில்போல் ஏதோ ஒன்று கிடைத்து விடாதா அதன் அடியை ஒடித்து அதன் மூலம் சுவாசிக்க எப்படியாவது ஒரு வழி ஏற்பட்டு விடாதா, அதனால் ஒரு கால் சுறாவுக்கு உணவாகிப் போனாலும் போகட்டும் ஆனாலும் உயிர் பிழைத்து இன்னொரு கால் கொண்டு உயிர் பிழைத்து எஞ்சிய வாழ்க்கையை தன்னை நம்பி இருப்பவர்களுக்காக வாழ்ந்து முடித்து விடலாமே என்று பதறித் துடிக்கும் அந்த பாவப்பட்ட உயிர் போல்.........
நம்மிலும் பெரும்பாலோர் கடலில் மூழ்கிய நிலையிலும் ஒரு கால் சுறா வாயினுள்ளும் என்கிற நிலையிலேயே. கர்மம் காலை சுற்றி அமிழ்த்த, செய்ய வேண்டிய கடமைக்காக கண்கள் மூங்கிலை தேடி பரிதவிக்க, பார்ப்போரின் பார்வைக்காக வலுக்கட்டாய புன்னகையில் நம் பிரகாசமான முகங்களெல்லாம் இங்கு !

Raheemullah Mohamed Vavar .

No comments: