Wednesday, August 31, 2016

மார்க்கம் / இஸ்லாம் மற்றும் சில விளக்கங்கள்

 குடும்பப் பெயர் என்று ஏதேனும் வைத்துக்கொள்ளலாம். அது ராவுத்தரோ மரைக்காயரோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீ உயர்வு நான் உயர்வு என்றாலோ இடையில் மண உறவுகள் இல்லை என்றாலோ அந்த நிமிடம் அவர்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் இல்லை.

 *
மார்க்கம் என்றால் அது சாதிகளை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்
இறைவன் என்றால் அவன் மார்க்கங்களை எல்லாம் ஒன்றாக ஆக்க வேண்டும்

 *
இந்த ஜமாத்தார்கள் என்று கூறிக்கொண்டு அடித்துக்கொண்டு ஆளாளுக்குப் பிரிகிறார்கள் என்றால் அவர்கள் எவருமே இஸ்லாமியர்கள் இல்லை!
ஆனால் ஜமாத்தார்கள் என்று ஊருக்கும் மார்க்கத்துக்கும் தொண்டு செய்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள்!


 லெபைக்கும்என்னவித்தியாசம்.
>>>>>>>>>>>
இந்து முறைப்படி பிரிக்கப்பட்டார்கள். செய்யும் தொழிலைக்கொண்டு பிரிக்கப்பட்டார்கள்
ராவுத்தர் - அரசாங்கப் பணி செய்பவர்கள், வீரர்கள்
மரைக்காயர் - கப்பல் வணிகம் செய்பவர்கள்
லெப்பை - சமூகச் சேவை செய்பவர்கள், மதச் சேவை செய்பவர்கள்
இதை அள்ளிக் குப்பையில் போட்டுவிட்டு இஸ்லாமியர்கள் என்று சொன்னால் மட்டுமே அவர்கள் இஸ்லாமியர்கள்.


 *
இஸ்லாம் என்ற பொது ஓடையிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பெயர் சூட்டிக்கொண்டு தன்னுடையது பிரிந்த தனியோடை என்று காட்டிக்கொள்பவன் உண்மையான இஸ்லாமியன் அல்ல.
*

 இந்தியாவில் வாழும் முஸ்லிம் இந்திய சட்டத்டை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
கனடாவில் இருக்கும் முஸ்லிம் கனடிய சட்டத்தை மதித்தே வாழ்வான். அப்படித்தான் வாழவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது
குர் ஆனை மதிக்காவிட்டால் குடிமட்டுமல்ல பிறப்பே மூழ்கிப் போய்விடும் ஓர் இஸ்லாமியனுக்கு


மெய்ஞான தேடல்!
அப்படியென்றால் என்ன?
அறிவுக்கும் மெய்ஞானத்திற்கும் உள்ள இடைவெளியை வெகுவாக உடைத்துவிட்டது இஸ்லாம்.
மெய்ஞானம் என்பது கற்பனையில் திளைக்கும் அறிவு.
மெய்யான அறிவு என்பது பகுத்தறிவில் வளர்ந்து திளைத்திருப்பது.
மெய்ஞானத் தேடல் என்பது பொய்யை நோக்கிய தேடலே!
அன்புடன் புகாரி


கட்டுரையை முழுமையாக படிக்க http://anbudanbuhari.blogspot.in

No comments: