Monday, August 22, 2016

படி படி யென;


Yasar Arafat

படி படி யென;
படுக்கும்வரை படுத்தியெடுக்கிறீர்கள்;
வீட்டுப்பாடம் முடிச்சாச்சா
யென முறுக்கி நிற்கிறீர்கள்;
மார்க் குறைந்தாலோ..
படிப்பவருடன் ஓப்பிட்டு ஒப்பாரி வைக்கிறீர்கள்;
ஒழுக்கமென்ற பெயரில்
ஓயாது வறுத்தெடுக்கிறீர்கள்;
மூட்டைகளை கொடுக்குறீர்கள்;
உறவினர்கள் வந்தால்
ஒப்பித்து காண்பிக்க சொல்கிறீர்கள்;

பிள்ளை அப்படி படிப்பானென
பூரித்து எனை புண்ணாக்குகிறீர்கள்;
உங்களையறியாமலே
எனை புண்ணாக்காய் மாற்றுகிறீர்கள்;
என் தனித்திறமை தெரியவில்லை;
விளையாட அனுமதி இல்லை;
விரும்பிய கார்ட்டூன் பார்க்க முடியவில்லை;
கட்டுக்கோப்பென என
கட்டிப்போட்டு சிரிக்கிறீர்கள்;
நல்லா படி; நல்லா படி என்றே
செவியில் சீழ்களை காய்ச்சி ஊற்றுகிறீர்கள்;
மனிதன் நானென்று அறிவியல் கூறுகிறது;
எந்திரமாய் வாழ நிதர்சனம் பயிற்றுவிக்கிறது;
சிறுபிள்ளை நானென்பதையே
யாவரின் மூளையும் வலிமையாய் மறுக்கிறது;
புத்திசாலி என்றே ஒரு
பொம்மையை உருவாக்குகிறீர்கள்;
களிமண் வயது இதுவென
எனை மண்ணு முட்டாய் திரிக்கிறீர்கள்;
ஐந்தில் வளையாதது என
முற்றாய் வளைத்து ஒடிக்கிறீர்கள்!


Yasar Arafat

No comments: