Sunday, September 4, 2016

அறியப்பட வேண்டிய நண்பர் அப்துல் கபூர் .

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  அப்துல் கபூர்.
அப்துல் கபூர் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அப்துல் கபூர். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

அப்துல் கபூர். அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரதுAbdul Gafoorஆக்கங்களை முகநூலில் https://www.facebook.com/gafoorfahim
பக்கத்தில் பார்க்கலாம் .

அப்துல் கபூர்.அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".


அறியப்பட  வேண்டிய நண்பர் அப்துல் கபூர் ...
அப்துல் கபூர் ...பற்றிய சில தகவல்கள்


அவரது ஊர் கோட்டாறு இளங்கடை...
இறையருளால் மேலப் புதுத்தெருவில் 1963 மே 13 ல் பிறந்தார்  ....
அரசு உயர் நிலைப்பள்ளி இடலாக்குடி + 2 படிப்பு முடித்தார்  ...
நாகர்கோயில் இந்துக் கல்லூரியில் B.Sc Bottany  ஆனால் பட்டம் பெறவில்லை .. .

10.10.1983 ல் குவைத்திற்கு பணியாற்ற சென்றார் ...
1990 நவம்பர் 2 ம் தேதி ஊர் திரும்பினார் அவரது (குவைத் ஈராக் தொடர்) ..
இங்கு படிக்கலாம் .
பின்னர் 13.12.1990 ல் இறையருளால் திருமணம் ...
அழகாக குடும்ப வாழ்க்கை ...
அவருக்கு இரண்டு மகன்கள் ...(24 மற்றும் 15 வயது)

20 ஜூன் 1992 ல் உகாண்டா வந்திறங்கி...
முக்வானோ கம்பெனியில் பணி செய்கின்றார்  ...
1996  ல் துவங்கப்பட்ட Uganda Social Educational Association (UgaSEWA) இந்த அமைப்பில் பத்தாண்டு தொடர்ந்து தலைவராக பணியாற்றினார்  (1997 - 2006)

பின்னர் 5 ஏப்ரல் 2007 ல் தான்சானியாவுக்கு கம்பெனியின் பணி நிமித்தமாக சென்றார்  ..
30.01.2009 ல் விடுமுறைக்கு ஊர் வந்து மீண்டும் உகாண்டா வந்து இறையருளால் இன்று வரை முக்வானோ கம்பெனியில் பணியாற்றுகின்றார்  ....

UgaSEWA வில் 5 முறை நிகழ்ந்த உணவுத் திருவிழா என்கிற மாபெரும் நிகழ்வுக்கு (2011 - 2015)
அப்துல் கபூர் ஒருங்கிணைப்பாளராய் செயல்பட்டார்  ..
இந்த ஆண்டும் அதே விழாவுக்கு ஒருங்கிணைப்பாளராய் செலாற்றுகின்றார்  ....
அப்துல் கபூர் ...படிக்கையில் தமிழ் இலக்கியம் படிக்கவில்லை ...
தமிழ் மீது கொண்டுள்ள பற்றாலும் இறைவன் வழங்கும் அருளாலும் அவரது அனுபவங்களாலும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுகிகின்றார்  ...
அவரது எளிமையான எழுத்துக்கள் படிப்பதற்கு  ஆர்வமாகவும் மனநிறைவாகவும் நிறைய செய்திகளை அறிய வைக்கின்தென்று  பலர் என்னை நேரிலும் அலைபேசியிலும் பாராட்டுகையில் நான் பரவசமடைகிறேன் ....
அன்புடன்.
அ.முகம்மது அலி ஜின்னா
நன்றி வஸ்ஸலாம் ...

No comments: