Sunday, September 18, 2016

இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :



அப்துல் கையூம்
இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :
தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?

"பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்."

ஆரம்ப காலத்தில் நாகூர் ஹனிபா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பாடிய பாடல் இது:


தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா.

இப்பாடல் திராவிட இன உணர்வாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது.

“பெரியார் பெயரை உச்சடித்தால், அண்ணாவின் பெயரைச் சொன்னால் ஒருவித முகக்கோணலுடன் சமுதாயத்தில் பலர் பார்த்து ஒதுக்கிய நேரத்தில் – அவர்களின் பெயரைச் சொன்னால் பிழைக்கவே முடியாது எனும் அச்சுறுத்தல் ஆட்டிப் படைத்த நேரத்தில் – இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மேடை தோறும் இசைமுழக்கம் செய்த அனிபாவின் இளமைத் தோற்றத்தையும் கண்டிருக்கிறேன். இன்று என்னை விட ஓரிரு வயது குறைந்தவராயினும் நரைத்த தாடியுடன் கழகத்தின் கொடிமரமாய் மிடுக்காகத் திகழ்வதையும் கண்டு பூரிப்புக் கொள்கிறேன்.”

என்று புகழாரம் சூட்டுகிறார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
அப்துல் கையூம்

No comments: