Tuesday, October 4, 2016

SPECIALISTS/SUPER SPECIALISTS

Vavar F Habibullah
SPECIALISTS/SUPER SPECIALISTS

இந்திய டாக்டர்கள் - அமெரிக்காவிலும் சரி; இங்கிலாந்திலும் சரி; வளைகுடா நாடுகளி லும் சரி, இன்றும் கொடிகட்டி பறக்கிறார்கள்.
வெளி நாடுகளில் பணிபுரிய நிச்சயம் அவர்கள் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.இதற்கு அறிவுக்கூர்மையும் அசாத்திய திறனும் அவசியம்.
இந்திய டாக்டர்கள், அங்கெல்லாம் புகழ்பெற்று விளங்குவதற்கு அவர்களின் திறமையே காரணம்.
டாக்டர்கள் இப்போது அதிக அளவில் IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு உயர் அதிகாரிகளாக பணி புரிந்து வருகிறார்கள்.
காரணம் முன்போல் மருத்துவ துறையை அவர்கள் விரும்பாததே காரணம்.
அரசு டாக்டர்கள் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தவித மரியாதையும் இல்லை.
தாலுகா ஆபீஸ் பியூனுக்கு கிடைக்கும் மரியாதை கூட அரசு டாக்டர்களுக்கு கிடைப்பதில்லை.
மருத்துவ கல்லூரி பேராசியர் நிலை இதை விட மகா கேலிக்குரியது.
ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவே பிறந்தவர்கள் போல் இவர்கள் மகா கட்டு பாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். அரசியல் வாதிகளால் இவர்கள் சில நேரங்களில் பந்தா டப்படுவதும் உண்டு. சில நேரங்களில் நோயா ளிகள் இவர்களை தாக்குவதும் உண்டு.

ரோடு ஆக்சிடண்டுகளில் மனிதர்கள் தினந்தோறும் இறப்பது பற்றி எவரும் கண்டு கொள்வதில்லை.ஆனால் அரசு மருத்துவ மனைகளில் வைத்து சில எமர்ஜன்சி கேஸ்கள் மரணம் அடைந்து விட்டால் டாக்டர்கள் மீது மட்டுமே கடுமையான குற்றங்கள் சுமத் தப்படுகின்றன.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான டாக்டர்கள் பலரை நான் அறிவேன்.
பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், அரசியல் வாதிகள் பெரும்பாலோர் அரசு டாக்டர்களிடம் சிகிச்சை பெறுவதை இன்றும் இழுக்காகவே கருதுகின்றனர்.
பெரிய படிப்பு படித்த அரசு டாக்டர்களை விட்டு விட்டு, பிரைவேட் டாக்டர்களை கன்சல்ட் பண்ணும் செயல், மேல்வர்க்கத்திடம் இன்றும் கவுரவமாகவே கருதப்படுகிறது.
அரசு டாக்டர்களே, பதவியை உதறிவிட்டு கார்பரேட் மருத்துவமனைகளில் பணியில் சார்ந்தால் அவர்களின் தரம் பன்மடங்காக உயர்ந்து விடுகிறது. அல்லது பிரைவேட்டாக கிளினிக் துவங்கினால் சமூகத்தில் அதிக மரியாதை கிடைக்கிறது.
இதனாலேயே சில சிறந்த டாக்டர்கள் வெளி நாடுகளுக்கு ஓடிப் போய் விடுகிறார்கள்.வெளி நாடுகளில் இந்திய டாக்டர்களின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்து கிடக்கும் நோயாளிகள் இப்போது மிகவும் அதிகம்.
படிப்பு ஒன்றே தான். இருந்தாலும் - இருக்கும் இடத்தை வைத்தே இவர்கள் தரம் பிரிக்கப் படுவது ஏன் என்பது மட்டும் இதுவரை எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
தமிழ் நாட்டில்........
கார்பரேட் மருத்துவ மனைகளில் பணிபுரிந்தால் மட்டும் டாக்டர்களின் தரம் உயர்ந்து விடுமா? அங்கு பணி புரிபவர்கள் ஏதேனும் ஸ்பெசல் டெஸ்ட் எழுதி பாஸ் செய்தவர்களா?
சாதாரண டாக்டர்களிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கும் மக்கள், கார்பரேட் மருத்துவமனை டாக்டர்களிடம் ஏன் எந்த கேள்வியும் கேட்பது இல்லை.
மருத்துவரான எனக்கே இதன் ரகசியம் இதுவரை புரியவில்லை.

Vavar F Habibullah

No comments: