Friday, November 18, 2016

கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது..

Saif Saif
கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும்
இருக்க முடியாது..
உகாண்டாவிலும் தான்..
இரு நாட்களுக்கு முன்னால் கம்பாலா சென்ற போது அங்கு தங்க நேர்ந்தது...
உறவுகளையும்,
நட்புகளையும்
சந்தித்ததில் மகிழ்ச்சி..
அன்பு,உபசரிப்பு,
பரிவு எதுவும் குறைவில்லை..எப்போதும் போல் சந்தோஷம்..
எப்போது கம்பாலா சென்றாலும் இங்கு தங்குவது தான் வழக்கம்..
இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை வசிப்பது பெரும்பான்மை தமிழ் மக்கள் தான்..
இங்கு தங்கும் போது நமதூரில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது...

12 வருடங்களுக்கு முன்னால் இங்கு நமதூர் மக்கள் ஏராளமானோர் குடும்பத்தோடு இருந்தார்கள்..
கட்டிடத்தின் பாதுகாப்பின்மை கருதியும்,பணிகளின் காரணமாகவும் பலர் இக் கட்டிடத்தை விட்டு மெல்ல மெல்ல வேறு பல இடங்களுக்கும் மாற்றலாகி விட்டனர்..
பிடிவாதமாக இஷ்டப்பட்டு போக மனமில்லாமல் சிலர் பல அதிர்வுகளையும்,
நடுக்கங்களையும் தாங்கி எது வந்தாலும் இதை விட்டு போக மாட்டோம் என உறுதியோடு இருப்பவர்களும் இங்கிருக்கிறார்கள்..
இக் கட்டிட உரிமையாளரும் அடிக்கடி சீரமைப்பு என பல விதமான யோசனையில் நாளுக்கு நாள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நாள் தவறாமல் செய்துக் கொண்டிருக்கிறார்..
அன்றும் என்னுடன் சிலர் இங்கு வேலையில்லாமல் இருந்தது போலவே இன்றும் சிலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.இது தொடரும் கதை தான்..இவர்களுக்கு வேலை கிடைக்கும் போது வரும் புதியவர்கள் வேலையில்லாமல் இருப்பார்கள்...
அப்போதெல்லாம் இரவு
வேலை முடிந்து வந்த
பிறகு இரவு
வெகுநேரம் பேசிக் கொண்டிருப்போம்..நேரம்
போவதே தெரியாது..
இப்போது நேரம்
போவது தெரிந்ததும் அனைவரும் வீட்டிற்குள் ஐக்கியமாகி விடுகிறார்கள்.. கலகலப்பாய் பேச
ஆட்கள் மிகவும் குறைவு..
எங்கும் அமைதி நிலவுகிறது..
எல்லோரும் முகநூலிலும்,வாட்ஸப்பிலும்
மூழ்கி விடுகிறார்கள்..
வராண்டாக்கள் காலியாகக் கிடக்கிறது..இரவு 8 மணிக்கே பெரும் நிசப்தம்
அன்றைய தினங்கள் போலல்லாமல் இப்போது பாதுகாப்பு காரணமாக எல்லா வீடுகளும் இறுக்கமாகப் பூட்டிக் கிடக்கிறது..
அந்த கட்டிடத்தை விட்டு கிளம்பும் போது வழக்கம் போலவே சிலர் எதையோ இடித்து எதையோ கட்டிக் கொண்டிருந்தார்கள்..
எந்த சலனமும் இல்லாமல்
வழக்கம் போல்
வருபவரை மகிழ்வோடு
வரவேற்று வாழ்வளிக்க
கம்பீரமாக தன்னம்பிக்கையோடு
தலை நிமிர்ந்து நிற்கிறது...
அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும்
#தீப்பெட்டி_பில்டிங்
♥♥♥
Saif Saif

No comments: