Monday, December 19, 2016

கைக்கடிகாரம் ....!

கையில் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளவேண்டும் என்பது நடுநிலைப்பள்ளி மாணவனாக இருக்கும்போது பதிமன் பருவத்து இயல்பான ஆசைகளில் ஒன்றாகும்.
வயது இருபதை தொட்டு வேலையிலும் சேர்ந்துவிட்டால் விதவிதமான கைக்கடிகாரம் வாங்கியணிந்து அழகு பார்ப்பது எண்பதுகளில் இளைஞர்களுக்கு ஒரு ஆடம்பர மோகமாக இருந்தாலும் அதில் தீங்குகள் ஏதுமில்லை.
மேற்சொன்ன அந்த ஆனந்த நிகழ்வுகளை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் பாருங்கள், எண்பதுகளில் உகாண்டாவின் பாதுபாப்பு சூழ்நிலைகள் அச்சுறுத்துவதாக இருந்தது. பலமுறை வன்முறை சாவுகளை நேரில் பார்த்தும், துப்பாக்கி முனையில் கணங்களை கழித்தும் உண்டு.

அத்தனை முறையும் படைத்தவன் பாதுகாப்பில் உயிர் பிழைத்து மீண்டுவிடுவேன். ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் இருந்த உடைமைகளை இழந்துஇருக்கிறேன், ஆசையுடன் வாங்கி கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் உட்பட.
அதிலிருந்து நேற்றுவரை நான் கைக்கடிகாரம் அணிவதில்லை. இப்போது அணிந்திருப்பது Wrist Fit இது நேரத்தை மட்டுமல்ல இதயத்துடிப்பு முதல் இன்று நடந்த தூரம், உண்டு செரித்த உணவின் சக்தி மற்றும் பலவும் கணித்து சொல்லும்.
கைக்கடிகாரத்தை கையில் கட்டாவிட்டால் என்ன வாங்கி வைத்துகொள்ளவதிலும்கூட டேக் ஹீயூர் TAG Heuer போன்றவற்றை வைத்துக்கொள்வது ஒரு சுகமான அனுபவம்.
இப்போதெல்லாம் கைக்கடிகாரத்திற்கு முன்புபோல் வரவேற்பு அதிகமில்லை. இப்போது உகாண்டாவில் அதுபோன்ற கடிகார பறிப்பும் இல்லை. இப்போதைய நாட்களில் வேறொரு அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறது அதுபற்றி பின்னொருமுறை பார்க்கலாம்.
தனக்கான இயல்பு விருப்புகளை பாதகமான சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்காக மாற்றிக்கொள்ளும் மனிதன் அதுவே சாதகமான சந்தர்ப்ப சூழ்நிலையாக மாறும்போது மீண்டும் மாற்றிக்கொள்கிறான்.
உகாண்டா நினைவுகள் ....!
தொடரலாம்.

ராஜா வாவுபிள்ளை

No comments: