Tuesday, January 24, 2017

26 - ஜனவரி 1965

Dr.Vavar F Habibullah
26 - ஜனவரி 1965
மாணவர்கள் திரண்டனர்.திட்டமிட்ட மாணவர் அமைப்பு ஒன்று தமிழகத்தில் உருவானது.
மாணவர்களின் நோக்கம் மிகவும் தெளிவாக இருந்தது. அதை செயல்படுத்த மாணவர்களில் இருந்தே அருமையான இளம் மாணவ தலைவர்கள் உருவாயினர்.
பா.சீனிவாசன், காளிமுத்து, துரைமுருகன்,
நா.காமராசன், எல் கணேசன், ரவிச்சந்திரன் என்று இந்த மாணவ தலைவர்கள் பட்டியல் நீளும்.

மாணவர்களின் தீவிரத்தை கணித்த அண்ணா 26 ஜனவரியை துக்க நாளாக அறிவித்தார்.
அன்றைய தமிழக காங்கிரஸ் முதல்வர்
பக்தவத்சலம் இதை கடுமையாக எதிர்த்தார்.
சென்னை கோட்டை நோக்கி படை எடுத்த மாணவர் கூட்டத்தை காவல்துறையைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்.
நூற்றுக் கணக்கான மாணவர்கள் மாண்டனர்.
பலர் தீக்குளித்து மாண்டனர்.
அன்றும் டெல்லி, தமிழன் போராட்டம் கண்டு எள்ளி நகையாடியது.தமிழ் மொழி காக்க உயிர் கொடுத்த தமிழ் மாணவர்களை சுட்டு கொன்றது சரிதான்.... என்று அன்றைய பாரத பிரதமர் சாஸ்திரியும், உள்துறை அமைச்சர் நந்தாவும் எந்த தயக்கமுமின்றி ஒப்புக்கொண்டனர்.
இதற்காக பக்தவத்சலத்தை பாராட்டவும் செய்தனர்.
ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து அன்று
இந்த இளம் மாணவர்கள் போராடாமல்
இருந்திருந்தால் தமிழகத்திற்கு நல்ல அரசியல் தலைவர்கள் கிடைக்காமல் போயிருப்பார்கள்.
1967...
மாணவன் சீனிவாசனிடம் தன் சொந்த ஊர் விருதுநகரில் தோற்று போனார் கிங் மேக்கர் காமராஜர்.
தமிழகத்தை விட்டு காங்கிரஸ் ஆட்சியை ஒரேயடியாக தூக்கி எறிந்தனர் தமிழக மக்கள். இன்றுவரை தமிழகத்தில் நிலையாக காலூன்ற அந்த கட்சியால் இயலவில்லை.
அன்றைய மாணவர் போராட்டமே தமிழக மக்களுக்கு பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் தமிழக அரசியல் தலைவர் களாக அறிமுகம் செய்து வைத்தது.ஆட்சி பொறுப்பிலும் அமர்த்தி அழகு பார்த்தது.
சற்று பொறுத்திருந்தால்....
ஜனவரி 24 - 2017 வரை அரங்கேறிய தமிழ் கலாச்சார போராட்டம் கூட புதிய அரசியல் தலைவர்களை நமக்கு பின்னாளில் பெற்று தரலாம்.
It is very unfortunate
in the history of Tamilnadu that
the slaves have become the leaders.

Vavar F Habibullah

No comments: