Thursday, January 12, 2017

மனிதன் அப்படித்தான்; அவ்வளவுதான்...!

காரியம் முடிந்ததும் கழட்டி விடும் ஒர் மனித கூட்டத்திற்கு நடுவில்தான் நாமும் வாழுகிறோம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்; உங்களின் முதுகிற்குப் பின்னே ஏராளமான துரோக ஆயுதத்துடன் சிரித்தப்படி சிலரும்; கோபத்துடன் எதிரியாக சிலரும்; வாஞ்சையுடன் அருகில் சிலரும் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்;
இயற்கையான இயல்புகளை குற்றம் பிடித்து என்செய்ய; மனிதர்களை குற்றம் பிடித்து என்செய்ய; அவர் மாற வேண்டும் இவர் மாற வேண்டும் அது மாற வேண்டும் இது மாற வேண்டுமென்று மாறாத ஒன்றுக்காக அவலாசை கொள்கிறோம்;
சின்ன சின்ன துளைகள் உங்கள் வீட்டின் மேற்கூரைகளில் விழுந்து; எத்தனை பாத்திரங்களுடன் நீரை பிடித்துவைக்கப்போகிறீர்கள் மழை பொழியும் போது; பொய்யும் அப்படித்தான்; ஒரளவிற்கு மேல் மன்னிப்புகளின் பாத்திரங்கள் சரிவராது;

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை நீங்கள் சந்திக்கும் மனிதர்கள்; சிலரும் வாழும் மனிதர்கள்; எல்லோரும் சந்திப்புக்குள்ளானவர்கள்தான்; ஒன்று நாம் கடந்துப்போவோம் அல்லது நம்மை அவர்கள் கடந்துப்போவார்கள்; காரியம் முடிந்ததும் கழட்டி விடும் ஒர் மனித கூட்டத்திற்கு நடுவில்தான் நாமும் வாழுகிறோம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்!
மனிதன் அப்படித்தான்; அவ்வளவுதான்...!
Tafara Rasay
தற்பெருமை யென்பது கால் விரல்களுக்குள் உண்டாகும் அரிப்புப்போல அவற்றை சொரிந்துக்கொண்டே இருக்க இருக்க இதமாய் இருக்கும்; பின் சதைகளை நீங்களாகவே பிய்த்துக்கொண்டு எரியுது என்பீர்கள்;
புகழ்ச்சிக்கு ஆசையென்பது எல்லோரும் உங்கள் முதுகை சொரிந்துவிடுவதுப்போல; கூட்டமும் கைகளும் சேர சேர உங்கள் முதுகுத்தோல்கள் பிய்த்து எடுக்கப்படும்!
-பெயர் தெரியா பெரியவர்
Yasar Arafat

No comments: