Tuesday, January 17, 2017

தலைவன்

Vavar F Habibullah

மனிதனை 'சூழ்நிலைக் கைதி' என்று தத்துவ வாதிகள் விமர்சிப்பர்.ஆனால் கார்ல் மார்க்ஸ் ஒரு படி மேலே போய்..
'மனிதன் அவன் வாழும் சூழலின் உருவகம்' MAN IS THE PRODUCT OF HIS ENVIRONMENT என்று சற்று புதுமையான விளக்கத்தை முன் வைத்தார்.
அமெரிக்காவில் ஆளுமைத் திறன் பெற்ற அனைவருமே குறிப்பாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவோர் பெரும்பாலோர் அமெரிக்காவின் தலை சிறந்த "ஐ.வி லீக்"
(Ivy League) எனப்படும் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களாகவே உள்ளனர்
ஜார்ஜ்W.புஷ், அவரதுதந்தை சீனியர்புஷ்,
கிளிண்டன், ஒபாமா, புதிய அதிபர் டிரம்ப் அனைவருமே இந்த ஐ.வி லீக் பலகலை கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர் ஆவர்.
ஹார்வேர்ட், ஏல் யூனிவர்சிடிகள் இதில் அடங்கும்.தலைசிறந்த நோபல் பரிசை இந்த பல்கலை கழகங்களே அதிக அளவில் தட்டி செல்கின்றன.பில் கேட்ஸ், ஆப்பிள் ஜாப்ஸ் எல்லாம் இந்த கல்விச் சாலைகளில் படித்து வந்தவர்கள் தான்.
நமது நாட்டின் கல்வி முறை இதற்கு
முற்றிலும் மாறானது.நமது தமிழ் நாட்டில், கல்வித் தகுதி என்பது அரசியல் வாதிகளுக்கு தேவையற்ற ஒன்றாகி விட்டது.
நாட்டின் ஜனாதிபதிக்கும், பிதமருக்கும், ஆளுனர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.எ போன்ற மக்களை ஆளும் ஆளவந்தார் எவருக்கும் நமது பொன்னாட்டில் கல்வி தகுதி என்பது அறவே தேவையில்லாத ஒன்று.இந்திய குடிமகன் என்ற தகுதி ஒன்றே போதும்.எழுத படிக்க தெரியாதவர் கூட நமது நாட்டில் எளிதாக முதல்வர் ஆகலாம்.
தமிழ் நாட்டின் கழக அரசியல் வரலாற்றில் அறிஞர் அண்ணா இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தார்.டபுள் எம்.ஏ பட்டங்களுடன்
அரசியலில் நுழைந்த அவர் பேச்சிலும், எழுத்திலும் தன்னிகரற்று விளங்கினார்.

இளைய சமுதாயத்தை அன்று தட்டி எழுப்பும் அரும்பணி அவருடையதாக இருந்தது.
In those days...
கல்லூரிகளும், பல்கலை கழகங்களும் அந்த காலங்களில் அண்ணாவின் பேச்சை கேட்பதற்காக காத்து கிடந்தன. ஒரு அரசியல் தலைவன், பேரறிஞராக மாணவர் மத்தியில் உலா வந்த காலம் அது. பார்லிமெண்டில் அண்ணாவின் உரை கேட்டு மெய் மறந்து போனார் அன்றைய பிரதமர் நேரு.
அன்றைய அரசின் பொருளாதார கொள்கை பற்றி அண்ணாவை கேட்ட போது அண்ணா சொன்னார்.
"The economic policy of India is neither
forward nor backward but awkward"
அண்ணாவின் இந்த அறிவாற்றல்
காரணமாகவே அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகம் அவரை அழைத்து கவுரவித்தது. படித்தவர்கள் அதிகம் பேர்
திமுக வில் இணையவும் அண்ணாவின் தலைமை ஒரு காரணமாக இருந்தது எனலாம்.
அறிஞன் தலைவன் என்பதாலேயே
பாமரர்களும் அவரை பின்பற்றினர்.அவர்
அடி பணிந்தனர்.அந்த நாட்களில் அண்ணாவின் கால்களில் எவரும் விழுந்து வணங்கியதாக
வரலாறு எதுவும் இல்லை.
புரட்சித் தலைவர் என்று அவரது கட்சிக்
காரர்களால் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் கூட அண்ணாவின் முன்னால் சற்று கூச்சத்துடன் ஒரு சிறு மாணவன் போல் கூனிக் குறுகி நிற்கும் காட்சி அண்ணாவின் பெருமைக்கு ஒரு சான்று.
அது சரி...
அண்ணாவின் வழி வந்த எம்.ஜி.ஆர் எங்கு கல்வி பயின்றார். ஏல் பல்கலைக் கழகமா! அல்லது ஹார்வார்ட் பல்கலைக்கழகமா!!
ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவார்..
'நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று.....
அதை, நான் உனக்கு சொல்லட்டுமா இன்று.'
தமிழக அரசியலில் அண்ணா ஒரு பல்கலை கழகம் தான். எந்த சந்தேகமும் இல்லை.

Vavar F Habibullah

No comments: