Sunday, January 22, 2017

பார்வையாளன்


Vavar F Habibullah

THE NEW AGE TAMIL GENERATION
சினிமா, அரசியல் சாயம் சிறிதும் கலக்காத தமிழனின் கலாச்சாரப் புரட்சிக்குரல் தமிழக வீதிகளையும் தாண்டி அகில உலகிலும்
எதிரொலிக்கிறது.
ஜல்லிக் கட்டுக்கும் பீட்டாவுக்கும் உள்ள கிராமிய பொருளாதரத்தின் ஏகாதிபத்திய சுரண்டலை தமிழ் மாணவன் தெளிவாக உணர்ந்ததன் விளைவே இந்த உயிர்த்
துடிப்பான போராட்டம்.
அரசியல்வாதிகளை விட அதிகாரிகளை விட இன்றைய இளைய தலைமுறை அதிகமாக சிந்திக்க தலைப்பட்டதன் விளைவே இந்த அறிவியல் புரட்சி.
ரஷிய புரட்சியையும், பிரஞ்சு புரட்சியையும் புரட்டிப் போடும் அளவிற்கு வீறு கொண்டு எழுகிறது தமிழ் இளம் மாணவர்களின் கலாச்சார புரட்சி.
இந்த இளம் தலைமுறையை நிச்சயம்
நம்பலாம். இன-மானம் காத்திட கிளர்ந்தெழும் இந்த இளம் தமிழ் காளைகளின் கரங்களில் தமிழகத்தை துணிந்து ஒப்படைக்கலாம்.
தமிழ் இன மக்கள் இதற்கு ஆதரவு அளித்தால் வரும் காலங்களில் புதிய தமிழ் சமூக
அரசியலில் பெரும் மாற்றங்களை கொண்டு
வர இயலும்.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!
THE EMOTIONAL WORDS

சாதி மத உணர்வுகளை தூண்டி அதில் குளிர் காய நினைக்கும் அரசியல் வேடதாரிகள் தலைகளில் சம்மட்டி கொண்டு அடிப்பது போல் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
காசுக்கு விலைபோகும் மீடியாக்களின்
சாயங்கள், மாணவர் - இளைஞர் சோசியல் மீடியாக்களின் முன் தலை கவிழ்ந்து கேட்பாரற்று கிடக்கின்றன. இனி அவை
மெல்ல சாகும்.
அரசியல் கட்சிகள் நாஞ்சில் சம்பத் போன்ற கூலிக்கு மாறடிக்கும் நாலந்தர எடுபுடி வேலையாட்களால் நிரம்பி வழிகின்றன.
அரசியல் கட்சி ஏஜண்டுகளின் கூக்குரலை கேட்டு மடுத்துவிட்ட காதுகளில் புதிய தமிழின கம்பீரக் குரல்கள் காசுக்காக இல்லாமல் தமிழ் மானம் காக்கவே எழும்போது, தாழ்ந்த தமிழகமும் இப்போது தலை நிமிர்கிறது.
இளைய தலைமுறையின் இந்த மாற்றம் பிரமிக்க செய்கிறது.
திராவிட நாடு திராவிடற்கே.....
என்று அரசியலில் மாயா பஜார் நடத்தியவர்களையும்,
மக்களால் நான்... மக்களுக்காக நான்...
என கூப்பாடு போட்டவர்களின் சுயநல கொள்கைகளையும் இன்றைய தமிழ்
இளைஞன் கண்டு கொண்டான்.
தங்கள் ஓட்டை பெற்றே, தங்களை சூறையாடி வயிறு வளர்க்கும் தமிழக அரசியல் வியாபார நிறுவனங்களை இன்றை ய இளம் தமிழன்/ மாணவன் அறிந்து கொண்டதன் விளைவே தமிழகம் வியக்கும் இந்த இளைஞர் புரட்சி.
தமிழன் விழித்து கொண்டால்...
இனி வருங்காலங்களில் வெத்து வேட்டு புரட்சி தலைவர்களும், தலைவிகளும் உருவாக மாட்டார்கள். கபாலிகளால் கூட்டம் சேர்க்க இயலாது.
அரசியலில் மாறுவேடம் இட்டு நடிப்பவர்கள் இனி என்ன முயன்றாலும் தமிழ்
இளைஞர்களை ஏமாற்ற இயலாது.
லெட்டர் பேடு அரசியல் வணிகர்கள் இனி மதிப்பிழந்து விடுவார்கள்.மீடியாக்களும் இவர்களை இனி புறந்தள்ளும்.
அரசியலில் இனி நேர்மையை, தூய்மையை நிலை நாட்ட தலைவர்கள் இனி போராட வேண்டியது வரும்.
வரும் காலங்களில், கோமாளி அரசியல் அழியலாம். அரசியல் நாடகங்கள் மதிப்பை இழக்கலாம். நடிகர்கள் முன்னாள் கூத்தாடிகள் ஆகலாம். இன - மான தலைவர்கள்
கழுவேறலாம். சின்னம்மாக்கள் ஆயாக்களாக மாறலாம்.
மாணவர்களைப் போல் அரசியலில் தேர்ச்சி பெற அரசியல்வாதிகளும் நீட் தேர்வு எழுதி பாசாகி தகுதி பெறும் நிலை வரலாம்.
தமிழ் மாணவர்களின் இந்த கலாச்சாரப் புரட்சி ஒரு அறிவார்ந்த அரசியல், சமுக, பொருளாதார மாறுதலை தமிழகத்தில் உருவாக்க நிச்சயம் உதவும் என்று நம்புவோம்.
வாழ்க ஜல்லிக்கட்டு!
வளர்க அதன் உயர் நோக்கம்!!
ஓங்குக மாணவர் ஒற்றுமை மற்றும் நேர்மை.
Now in Tamilnadu,
STUDENTS AND YOUTHS ARE NO MORE
SPECTATORS OF POLITICS - BUT
PERFORMERS OR ACTION - HEROES OF
TAMILNADU POLITICS.
It is a welcoming trend.
Vavar F Habibullah



Photo courtesy:  Vanitha Satheesh

No comments: