Thursday, January 26, 2017

கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் உகாண்டா அதிபர் ....


Abdul Gafoor


NRM Day (Non Resistant Movement)
சுருக்கமாகவும் நெருக்கமாகவும் பதிவு செய்கிறேன் ...
இனியவர்களே ...
இறைவன் போர்த்திய பசுமை போர்வையின் சுமை தாங்கும் உகாண்டாவை வதைத்து சீரழித்த சூழல்களுக்கு நல் விதைகள் விதைத்து அராஜக ஆட்சியினை அகற்றி ராஜ நடை போடும் அதிபர் மாண்புமிகு யுவேரி ககுட்டா முசெவேனி அவர்கள் இன்று 33 வது ஆட்சியாண்டில் (26.01.1986) அடியெடுத்து வைக்கிறார் .... அல்ஹம்துலில்லாஹ் ...
தம்மை எதிர்த்து வால் ஆட்டும் எதிரிகளுக்கு சவால் விட்டு நாட்டின் தலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமை ஆகியவைகளை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் கெட்டிக்கார மனிதர் ...

மக்கள் செல்வாக்கில் எம் ஜி ஆரின் முகத்தையும் மேடை பேச்சாற்றலில் கலைஞரின் நாவையும் பெற்றிருக்கும் பெருமை இவரது தனிச் சிறப்பு ....
அதிரும் வார்த்தைகளால் தமது உதடுகள் அசைந்து உதிரும் கட்டளைகளுக்கு இசைந்து இயங்கும் ஆட்சியினையும் தேசத்தின் வளர்ச்சியினையும் சீர்குலைக்கும் சிறு துரும்பு விழுந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி கரும்பு போல் பிழியும் சாதுரியம் இவரின் திறமைக்கு சான்றுகள் எழுதுகிறது ....
ராணுவம் உறுதித் தன்மை கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் முதலுடுகள் தொழிலகங்கள் வருவாய் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து சாலை பராமரிப்புகள் வணிக வளாகங்கள் குடியிருப்புகள் போன்ற தேசத்தின் எண்ணற்ற முன்னேற்ற திட்டங்களின் அணிவகுப்பு பட்டியல்கள் நைல் நதி போல் நீண்டு செல்லும் ....
முந்தைய அதிபர்கள் ஆண்ட ஆட்சிகளின் கவிழ்ப்பு சம்பவங்களில் மாண்ட எண்ணிலடங்கா மக்களது வாழ்க்கையின் கொடுமைகள் உகாண்டாவின் அழியாத சுவடுகள் ....
பேரிறைவனின் பேரருளை அடுத்து சுதந்தர உகாண்டாவில் இவரது சுந்தர ஆட்சி நாங்கள் பணியாற்றி நிம்மதியாய் வாழ்ந்திட பேருதவி புரிகிறது என்றால் அது மிகையாகாது ....
அதிபர் யுவேரி முசெவேனி (75) அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நீடித்த ஆட்சியினையும் இறைவன் வழங்குவானாக ....
பேரன்புடன்
அப்துல் கபூர்
26.01.2017 ...
.

Abdul Gafoor

No comments: